tamilnadu epaper

வாட் போ புத்தர் ஆலயம் !

வாட் போ புத்தர் ஆலயம் !

 

ஆசையைத் துற

அறிவுரை கூறியவரை

ஆசையுடன் பார்க்க

அவர் கோயில் " வாட் போ "சென்றோம் !!

 

பிரமாண்டக் கட்டிடக்கலைக் கூடங்கள்

பிரமிக்க வைத்தன !!

புத்தரின் சிறிய சிலைகள்

ஒவ்வொரு சிங்காரக் கூடத்தில் !

 

உயர்ந்த நீளமான கலைக்கூடத்துள்

தங்கச்சிலையாக

46 மீட்டர் நீளத்தில் படுத்திருந்தார்

(15 அடிக்கும் மேலான உயர மார்பு)

புத்த பகவான்

தலையைத் தாங்கியபடி !!

 

முழுவதும் புகைப்படத்தில்

முடக்க முடியா அனந்த சயனம் !!

 

என்னைப் புகைப்படமும்

எடுக்க ஆசைப்படாதே

என்பது போல் தோன்றியது !!

எனக்கு.

 

ஆசையாகப் பார்க்க

ஆயிரக்கணக்கில்

அங்கு வந்து கொண்டிருந்தனர்

பற்பல வெளிநாட்டினர்கள் !

 

சுற்று வளாகத்தில்

63 நாயன்மார்கள் போல்

வரிசையாகச் சிறியளவு

புத்தர் சிலைகள்.!!

 

பார் புகழும் தாய் மசாஜ் 

பாரம்பரிய சிகிச்சை நிபுணர்கள்

வளாகத்தில் ஒரு அறையில் சிகிச்சை

செய்து வந்தனர் !!

 

வெளிப்பிரகாரத்தின் ஒரு பகுதியில்

சிறுவர்களின் 'தாய்மொழிப்'

பள்ளிக்கூடம் இயங்கியது !!

 

வாட் போ புத்த ஆலயம்

கட்டிடக்கலை அற்புதம் 

வியப்புற வைத்தது !!

 

 

சண்முக சுப்பிரமணியன்

பேங்காக், தாய்லாந்த்.