தீபக் பாண்டியாவின்
திருமகளே
மைக்கேல் வில்லியம்சின்
மணாளினியே
அகவை முதிர்ந்த ஆரணங்கே
அண்டம் சுற்றிய
அறிவொளியே
உன்னால் பெருமை
உலகினிலே
தன்னால் வந்ததுபெண்
தளிர்களுக்கே
பாரதி கண்ட
புதுமைப்பெண் நீ
பதுமை அல்ல
பூவுலகில்
பாரதவழி வம்சம்
பெருமை
பாரெங்கும் பேசுது
உன்னாலே
பூத்தது முகத்தில்
புன்னகையும்
பாலும் வார்த்தாய்
பரிவுடனே
கையசைவு காண
காத்திருந்தோம்
கண்கள் பனித்தது
கனப்பொழுது
சுழலும் புவியில்
சுழலாமல்
சுற்றி இருந்ததே சுற்றமெலாம்
இணையம் இணைந்தார்
இதயமெலாம்
இன்பம் கண்டார்
இன்முகத்தால்
துடித்த உள்ளங்கள்
துவளாமல்
அடித்த நாடித்துடிப்பும் அடங்காமல்
அரிய சாதனை ஆற்றிய
சுனிதா வில்லியம்சே
வாழ்க பல்லாண்டு
விண்டு சொல்ல
வேண்டுமே
விண்வெளிப் பயண
அனுபவத்தை.
-சிவ . சே.முத்துவிநாயகம்
திருநெல்வேலி