tamilnadu epaper

விளாத்திகுளத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

விளாத்திகுளத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்



கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம்,

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.


விழாவிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமை தங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ கலந்து கொண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி கவியரசன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

மாட்டு வண்டி உரிமையாளர்கள், சாரதிகள், பார்வையாளர்கள் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.