Breaking News:
tamilnadu epaper

"அட்வைஸ் அண்ணாச்சி"

"அட்வைஸ் அண்ணாச்சி"

கலைவாணிக்கு ஆச்சரியமாய் இருந்தது. "உனக்கு என்னடா ஆச்சு?... எப்பவுமே அண்ணாச்சி மளிகை கடைக்குப் போயிட்டு வாடா!"ன்னு சொன்னா.... "ஐயோ அந்த அண்ணாச்சி அட்வைஸ் பண்ணியே ஆளைக் கொன்னுடுவார் சாமி... தயவு செய்து என்னை அங்க மட்டும் போகச் சொல்லாதே"ன்னு சொல்லுவே.... இப்ப நீயே தினமும் வலிய வந்து, "அண்ணாச்சி கடைல ஏதாச்சும் வாங்கணுமா?"ன்னு கேட்டு வாங்கிட்டு போறியே ஏன்?.... என்ன காரணம்?"

 

   பதிலேதும் பேசாமல் சிரித்தபடி நகர்ந்த மகனை நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பார்த்தாள் கலைவாணி.

 

    அடுத்த வாரத்தில் ஒரு நாள், கையில் பெரிய பரிசுக் கோப்பையுடன் வந்து நின்ற ரகு சொன்னான். "அம்மா ஸ்கூல்ல ஒரு போட்டி வெச்சாங்க... "அரும்புகளுக்கான அறிவுரைகள்"ன்னு அதில் யார் நிறைய... நல்ல... நல்ல அறிவுரைகள் எழுதறாங்களோ அவங்களுக்குத்தான் முதல் பரிசு... அந்தப் போட்டில எனக்குத்தான் முதல் பரிசு!"

 

    "எப்படிடா?" நம்ப முடியாமல் கேட்டாள் கலைவாணி.

 

   "இப்பெல்லாம் நான் தினமும் அண்ணாச்சி கடைக்கு போனது எதுக்கு?..அவர் சொல்ற அறிவுரைகளை அப்படியே கொண்ட போய் போட்டில எழுதறதுக்குத்தான்!"

 

இந்தக் காலக் குழந்தைகளை நினைக்க வியப்பாகவும், அதே நேரம் பெருமையாகவும் இருந்தது கலைவாணிக்கு.

 

(முற்றும்)

 

முகில் தினகரன், கோவை