tamilnadu epaper

"நாடோடி ஃபிகர்கள்"

"நாடோடி ஃபிகர்கள்"

நண்பர்களோடு காட்டுப் பகுதிக்கு சுற்றுலா வந்த நான் வழி தவறி அடர்ந்த காட்டுக்குள் தனியாளாய் அலைந்து, திரிந்து... கடைசியில் அந்த காட்டுவாசிக் கும்பலிடம் சிக்கிய போது என்னையே அறியாமல் பயத்தில் மயங்கி விழுந்தேன்.

 

கண் விழித்துப் பார்த்த போது, சிம்மாசனத்தில் மாப்பிள்ளைக் கோலத்தில் அமர்ந்திருந்தேன். என் எதிரே ஏழெட்டு நாடோடி ஃபிகர்கள் என்னை வெட்கத்துடன் பார்த்து, தங்களுக்குள் அவர்கள் பாஷையில் "கரா... முரா"வென்று பேசிக் கொண்டனர்.

 

ஒவ்வொருத்தியும் கருங்கரும்பு போல், அப்படியே கடித்துத் தின்று விடலாம் போலிருக்க,

 

ஒருத்தி என்னைப் பார்த்து " நீ எனக்குத்தான்" கை ஜாடையில் சொல்ல, அவள் கையைத் தட்டி விட்ட இன்னொருத்தி கோபமாய் மறுத்து, "இல்லை.. அவன் எனக்குத்தான்" என்றாள் ஜாடையில்.

 

முன்றாவதாய் ஒருத்தி "கரா...முரா"வெனக் கத்தி என்னை உரிமை கொண்டாடினாள்.

 

என்னுடைய மாப்பிள்ளைக் கோலத்தையும், அவர்களின் பார்வையையும், கை ஜாடையையும் வைத்து ஓரளவுக்கு யூகித்தேன்.

 

 "என்னைக் கல்யாணம் செய்து கொள்ளத்தான் "நான்....நீ"ன்னு போட்டி போடுகிறார்களோ?.... இல்லை என் கூட கில்மா பண்ணத்தான் போட்டி போடுறாளுகளோ?" எனக்குள் பயம் போய் கிளுகிளுப்பு ஏறியது.

 

தலைவன் போலிருந்த ஒருவன் ஓடி வந்து அந்த பெண்களுடன் கலந்து பேசி, மிகவும் அழகான ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து, என்னையும் அவளையும் குடிசைக்குள் அனுப்பி வைக்க, "அடேய். திவாகரா.... உனக்கு....இப்படியொரு அதிர்ஷ்டமா?"

 

குடிசைக்குள் சென்றதும் என்னை அருகில் அழைத்துக் கட்டித் தழுவியவள், சட்டென்று என் குரல்வளையில் வாயை வைத்துக் கடித்து, "க்ளக்... க்ளக்"கென்று என் ரத்தத்தை உறிஞ்ச,

 

 "அடிப்பாவிகளா.... என்னைக் கடிச்சுத் திங்கத்னத்தான் "நான்... நீ"ன்னு போட்டி போட்டிங்களா?" நினைத்து முடிப்பதற்கு இறந்து போனேன்.

 

(முற்றும்)

 

முகில் தினகரன், கோவை