மனைவி சரோஜாவிடமிருந்து பதட்டத்துடன் போனை வாங்கிக் கொண்டார் சிவராமன். 

 

"நீங்க மிஸ்டர் சிவராமன் தானே! PAN நம்பர் BTS.......தானே. "  

 

ஆமாம் சார் "" />

tamilnadu epaper

"வருமான வரி"

"வருமான வரி"

வருமான வரி

--------------------------

 

"என்னங்க இன்கம்டாக்ஸ் ஆபீஸ்லேருந்து போன்"

 

மனைவி சரோஜாவிடமிருந்து பதட்டத்துடன் போனை வாங்கிக் கொண்டார் சிவராமன். 

 

"நீங்க மிஸ்டர் சிவராமன் தானே! PAN நம்பர் BTS.......தானே. "  

 

ஆமாம் சார் " பதிலளித்தார் சிவராமன் 

 

"நாளைக்கு காலையில் 10 மணிக்கு நீங்கள் அஸிஸ்டண்ட் கமிஷனரை வந்து பார்க்கவேண்டும்.உங்க மொபைல் நம்பருக்கு எஸ் எம் எஸ் வந்திருக்கும் பாருங்க "

 ஏன் எதற்கு என்று சொல்லாமல் கொள்ளாமல் போன் வைத்துவிட்டார் மறுமுனையில். 

 

"நான் ரெகுலராக வருமான வரி கட்டிக்கொண்டு தானே இருக்கிறேன்.எந்த வருமானத்தையும் மறைக்க வில்லையே. ஏதாவது குற்றம் கண்டுபிடித்து பெனால்டி போடுவார்களோ? சே! நல்லவர்களுக்கே காலம் இல்லை .கிருஷ்ணா காப்பாத்து ." புலம்பிக்கோண்டிருந்தார் சிவராமன். 

 

மறுநாள் காலை சிவராமன் வருமானவரி ஆபீசுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

 

"ஏங்க உங்களுக்கு இவ்வளவு டென் ஷன்.தைரியமா போய்ட்டு வாங்க. வரி ஏய்ப்பு செய்யறவன் எல்லாம் தைரியமா சந்தோஷமா இருக்கான். ஒழுங்கா வரி கட்டற நீங்க ஏன் பயப்படறீங்க. பதட்டப்படாமெ போய்ட்டு வாங்க " மனைவி சரோஜா

 

வருமானவரி அலுவலகத்தில் அஸிஸ்டன்ட் கமிஷனரைப் பார்ப்பதற்காக காத்திருந்தார் சிவராமன். ஒரே படபடப்பு.

 

"சார் ஏஸி உங்களைக் கூப்பிடறார்" 

சிவராமனுக்கு படபடப்பு அதிகமானது.

 

 அஸிஸ்டண்ட் கமிஷனர் முன்னால் இருந்த இருக்கையில் உட்கார்ந்தார் சிவராமன். 

 

" வாங்க மிஸ்டர் சிவராமன். குட் மாரனிங்!!

கங்ராசுலேஷன்ஸ்!. நேர்மையாக வரி செலுத்தும் மக்களைப் பாராட்ட வேண்டும் என்ற அரசாங்கத்தின் ஆணைப்படி எங்கள் சர்கிளில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். அதற்கான சான்றிதழ் இன்னும் ஒரு பத்து நிமிடங்களில் உங்களுக்கு ஆபீசில் எல்லோர் முன்னிலையில் வழங்கப்படும்! " சொன்னார் அஸிஸ்டண்ட் கமிஷனர். 

 

 முரளிதரன் ராமராவ், புனே