tamilnadu epaper

10-30-1 ஜடேஜா மிரட்டல்

10-30-1 ஜடேஜா மிரட்டல்

வேகப்பந்து வீச்சை நியூஸிலாந்து வீரர்கள் புரட்டியெடுத்ததால், இதற்கு மாற்றாக இந்திய அணி 4 சுழற்பந்துவீச்சு மூலம் தாக்குதல் தொடுத்தது. வருண் சக்கரவர்த்தி, குல்தீப், அக்சர், ஜடேஜா ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்களும் மிரட்டலாக பந்துவீச, நியூஸிலாந்து அணி 37.5 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து இருந்த போது மிடில் ஆர்டரை இழந்தது. மாலை 5 மணி நிலவரப்படி வருண் சக்கரவர்த்தி, குல்தீப் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக பந்து வீசி இருந்தாலும், ஜடேஜா டெத் ஆர்டரில் மிக அருமையாக பந்து வீசி மிரட்டினார். சிறந்த எகனாமியுடன் 10 ஓவர்களை விரைவாக வீசிய 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை (10-30-1) வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.