திருவள்ளுர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் மஹாலில் இன்று டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 175 பயனாளிகளுக்கு ரூ.52.35 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் .சாமு.நாசர் அவர்கள் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் .மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சசிகாந்த் செந்தில். ஆவடி மாநகராட்சி மேயர் .கு.உதயகுமார், அவர்கள் ஆகியோர் உள்ளனர்.