tamilnadu epaper

19 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள்

19 கோடி வீடுகளுக்கு  குடிநீர் இணைப்புகள்


புதுடெல்லி, மார்ச் 25–

 ஜல் ஜீவன் மிஷன் ஆகஸ்ட் 2019 ல் தொடங்கப்பட்டபோது, நாட்டில் 3.23 கோடி (16.8%) கிராமப்புற வீடுகளில் மட்டுமே குழாய் நீர் இணைப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 16.03.2025 அன்றைய நிலவரப்படி, சுமார் 12.29 கோடி கூடுதல் கிராமப்புற வீடுகளுக்கு இந்த இயக்கத்தின் கீழ் குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தமுள்ள 19.37 கோடி கிராமப்புற வீடுகளில், 15.52 கோடிக்கும் அதிகமான (80.19%) வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று மக்களவையில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.