பிளஸ்2 தேர்வில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 98 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
மாணவி தேவி பிரியா 600க்கு 582 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவி லோகிதா ஷிவானி 578 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், ஜெனிலியா 600க்கு 577 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
இப்பள்ளியில் மாணவி தேவிப்பிரியா இயற்பியலிலும், மாணவி பிருந்தா கணிதத்திலும், தேவிப்பிரியா, பிருந்தா, கண்மணி, சொர்ண தீபிகா ஆகியோர் கணினி அறிவியலிலும், சங்கீதா வணிகவியலிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர் ஜான்சிராணி, உதவி தலைமை ஆசிரியர் ஜெகதா, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் வாழ்த்தினார்கள்.