கரூர், ஏப்.16 -
கரூர் மாவட்டம், தந்தோணி வட்டாரம் இராயனூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் 25 மெ.டன் குளிர்பதன கிட்டங்கி அமைந்துள்ளது. இக்கிட்டங் கியில் பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள் போன்ற வேளாண் விளைபொருட்களை வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டு விவசாயிகள், வியாபாரிகள், தொழில்முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. குளிர்பதன கிட்டங்கிக்கு மாத வாடகையாக ரூ.6191/- + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். குளிர்பதன கிடங்கிற்கான மின் கட்டணத்தை ஒப்பந்தம் மேற்கொள்ளப் படும் பயனாளி செலுத்த வேண்டும். மேலும் 6 மாதகால வாடகை முன்பண தொகையாக செயலாளர், விற்பனை குழு, திருச்சிராப்பள்ளி அவர்களுக்கு செலுத்த வேண்டும். எனவே 25 மெ.டன் குளிர்பதன கிட்டங்கியை விவசாயி கள், வியாபாரிகள், தொழில்முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார். மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற ddab.karur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், வேளாண்மை துணை இயக்குநர், (வேளாண் வணிகம்) இராயனூர் அலு வலகத்தையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.