பாரத் முன்னணி அமைப்பின் சார்பில் காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய 02.05.2025 அன்று மாலை 5 மணிக்கு சென்னை திருவொற்றியூர் அருள்மிகு ஸ்ரீ வடிவுடையம்மன் சமேத ஶ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலுக்கு வெளியே பாரத் முன்னணி திருவொற்றியூர் தொகுதி தலைவர் நீலகண்ட குமரன் சுவாமிகள் தலைமையில் 50 மேற்பட்ட பாரத் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சங்கநாதம் முழங்க, திருவாசகம் பாடி, மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்வில் பாரத் முன்னணி தலைவர் கே.எஸ். சிவாஜி, வீரத் தமிழர் இந்து சேனா நிறுவனர் தென்னரசு, பா.ஜ.க. பிரமுகர் கணேசன், சந்த் மகா சபா மாநில பொதுச் செயலாளர் சண்முகம், சன்மார்க்க சங்கம் அரசு ஒளி, அகில பாரத இந்து மக்கள் சேனா செந்தில், பாரத் முன்னணி மாநில துணை தலைவர் வெஸ்டர்ன் மணி, பாரத் முன்னணி மாநில அமைப்பு செயலாளர் காந்தி, பாரத் முன்னணி திருக்கோயில் பாதுகாப்பு பேரவை மாநில செயலாளர் முத்துக்குமாரன், பாரத் முன்னணி வடசென்னை மாவட்ட தலைவர் நெல்லை சக்திவேல், மாவட்டச் செயலாளர்கள் ரஜினி பாபு, செல்வம், மாவட்ட இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி தலைவி சந்திரகலா, ஆர்கே நகர் தொகுதி துணைத் தலைவர் மாஸ்டர் காளிமுத்து, ஆர்கே நகர் தொகுதி இளைஞரணி தலைவர் கோபால், திருக்கோயில் பாதுகாப்பு பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கர், தொகுதி பொறுப்பாளர்கள் ஜானகிராமன், விஜயன் மற்றும் பாரத் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.