பிரதமர் மோடி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதாக என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து புதிய 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டன. 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஏழை மக்கள் அதை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவது அரிதானதாக இருந்தது.
இந்த நிலையில்தான் கடந்த 2023ஆம் அண்டு மே மாதம் 19ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாய் திரும்பப் பெறப்படும் என ஆர்.பி.ஐ. அறிவித்தது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தவர்கள் அதை வங்கிகளில் செலுத்தி, அதற்குப் பதிலாக மாற்றுப் பணம் பெற்றுக்கொண்டனர்.
காலக்கெடு முடிந்த நிலையில், ஆர்பிஐ அலுவலகங்கள், தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் என ஆர்பிஐ தெரிவித்தள்ளது.
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு 19ஆம் தேதி வரை 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வந்தன.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை 6,266 கோடி ரூபாய் இன்னும் வங்கிக்கு திரும்பாமல் வெளியில் உள்ளது என ஆர்பிஐ தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.