மதுரை, மே 3
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 12ம் தேதி நடக்கிறது.
இதில் பக்தர்கள், பொதுமக்கள் மீது தண்ணீரை பீச்சி அடிப்பது உண்டு, இதற்கு அழகர் கோவில் நிர்வாகம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அவை பின்வருமாறு..
*நிகழ்ச்சியின்போது பக்தர்கள் தண்ணீரை தோல் பையில் நிரப்பி அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மூலம் அடிக்கக் கூடாது.
*வாசனை திரவியம், வேதிப்பொருட்கள் அடங்கிய தண்ணீரை உற்சவர் சிலை மீது பக்தர்கள் பீய்ச்சி அடிக்க வேண்டாம்.
*விரதம் இருந்து ஐதீக முறையில் தண்ணீரை பீச்சி அடிக்க பக்தர்கள், பொதுமக்களுக்கு வேண்டுகோள்.
மேலும், அன்னதானம் வழங்குவதற்கான விதிமுறைகளை ஏற்கனவே மதுரை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.