சென்னை, மே3--
சாதி வாரி கணக்கெடுப்பை அரசியல்ரீதியாக அணுகக்கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா கூறினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி கவுன்சில் என்பது மோடி போடும் வரி இல்லை. எல்லா மாநில நிதியமைச்சர்களும் அடங்கியதுதான் கவுன்சில். நடுத்தர மக்கள் பயன்படுத்தப்படும் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என்ற வாதம் தவறானது. ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்னதாகவே வரி இருந்தது. முன்னதாக இருந்ததை விட ஜிஎஸ்டி வந்த பின் வரி விகிதம் குறைந்துள்ளது.
சாதி பெயர் பலகை
தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது?- சாதிகளுடன் பெயர் பலகை உள்ளது. இன்றும் தமிழ்நாட்டு வீதிகளில் சாதி பெயர் அடங்கிய தெருக்களின் பெயர் பலகைகள் காணப்படுகிறது.
சமத்துவம் பேசும் திமுக, சாதிவாரி கணக்கெடுப்பில் வெற்றி என கூறுவதா?. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது திமுக-வின் வெற்றி எனக் கூறுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை அரசியல் ரீதியாக அணுகக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.