கிரிக்கெட் உலகில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9ஆவது சீசன் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும்) நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஞாயிறன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. அரையிறுதி ஆட்டங்கள் புதன்கிழமை அன்று நிறைவு பெற்றது. ஆனால் அடுத்த 3 நாட்களுக்குப் பின் தான் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. 3 நாட்கள் இடைவெளி என்பது வீரர்களின் பார்ம் பிரச்சனையை கடுமையாக பாதிக்கும். அதாவது இன்னும் 3 நாட்கள் உள்ளதே என வீரர்கள் உணவுப் பழக்கத்தை மாற்றுவார்கள் ; பயிற்சியை தள்ளிப்போடு வார்கள்; கடின பயிற்சியை புறந்தள்ளி சனியன்று பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியமான மனநிலையை அடைய வாய்ப்புள்ளது. இதனால் இறுதிப்போட்டிக்கான 3 நாட்கள் இடைவெளி வீரர்களின் பார்மை இழக்கச் செய்யும் என்பது குறிப்பிடத் தக்கது.