கவுகாத்தி,
வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர், அடையாள அட்டையுடன் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், வங்காளதேசத்தில் இருந்து அசாம் எல்லை வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக 4 பேர் நுழைந்தனர். வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவின் அசாம் மாநிலம் ஸ்ரீபூமி மாவட்ட எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேசத்தினர் 4 பேரை எல்லைப்பாதுகாப்புப்படையினர் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சொந்த நாடான வங்காளதேசத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.