என்று வாய்நிறைய முகமலர்ச்சியுடன் உள்ளத்தில் துள்ளிக்குதித்து வரவேற்ற என்னால் இம்முறை வழக்கம்போல் சொல்லாமல் கொள்ளாமல்" />
காலிங்பெல் அடித்த அடுத்த நிமிடத்தில் ஓடிப்போய் வாசல் கதவை திறக்கிறேன்.
எதிரில் அக்கா!
" அக்கா!..வா..வா!..வாக்கா...
என்று வாய்நிறைய முகமலர்ச்சியுடன் உள்ளத்தில் துள்ளிக்குதித்து வரவேற்ற என்னால் இம்முறை வழக்கம்போல் சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிற அக்காவை வரவேற்க முடியாமல் வெறுப்புடன் உதட்டளவில் "வா...அக்கா..என
இழுத்தப்படி உள்ளே அழைக்கிறேன்.
அக்கா முகம் வழக்கம்போல சோகத்தில் வழிந்தபடியே உள்ளே வருகிறது.
இம்முறை என்னால் ஒரு பைசாக்கூட கடன் கொடுக்க முடியாது என்பதை எப்படிச்சொல்வேன் என்று கையைப்பிசைந்தபடி உள்ளே செல்கிறேன்.
"தம்பி!.."என்று வாஞ்சையோடு அழைத்த அக்கா சொல்கிறாள்...
" இந்தமுற..கடன் வாங்க வரலடா தம்பி!...இந்தா அடகுல இருந்த என் கை வளையல்களை மீட்டுட்டேன்!
இதை நீ வச்சிக்கோ!..
உங்கிட்ட இதுவரை வாங்கின கடனை அடைச்சுட்டு இதை மீட்டுக்கிறேன்!" என்றவுடன்..
" அக்கா!.." என்று அவள் கையைப்பற்றிக்கொண்டு
உடைந்துபோய் அழுகிறேன் நான்.
என்னை அணைத்தபடி தேற்றுகிறாள் அக்கா.
-- அய்யாறு.ச.புகழேந்தி