என்னைத்தேடவேண்டாம். உங்களை விட்டு நான் வெகுதூரத்தில் இருக்கிறேன்.

    நீங்கள் சொன்ன எதையும் நான் கேட்கவில்லை!..எல்லா தீயப்பழக்கங்களாளும் எல்லா வியாதியுடன்தான் செல்கிறேன்!. 

 " />

tamilnadu epaper

அன்புள்ள அம்மா..

அன்புள்ள அம்மா..

மகனின் கடிதத்தை பிரித்தாள்

மாலதி...

   "அன்புள்ள அம்மாவுக்கு,

என்னைத்தேடவேண்டாம். உங்களை விட்டு நான் வெகுதூரத்தில் இருக்கிறேன்.

    நீங்கள் சொன்ன எதையும் நான் கேட்கவில்லை!..எல்லா தீயப்பழக்கங்களாளும் எல்லா வியாதியுடன்தான் செல்கிறேன்!. 

          என்னைப்பற்றி எந்தக்கவலையும் படாமல் அப்பாவும் நீயும் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்க

வேண்டும் எப்போதெல்லாம் என்னை நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்த என் கடிதத்தை எடுத்து படித்துக்கொள்ளுங்கள்!... நான் உங்கள் கூடத்தான் இருக்கிறேன்.

                              ப்ரியமுடன்..

                                        கண்ணன்."

      கடிதத்தை மடித்து அவன் புகைப்படத்துக்கு பக்கத்தில் வைத்துவிட்டு புற்று நோயால் மரணமடைந்த மகனின்

நினைவில் ததும்பும் தன் கண்ணீரைத்துடைத்துக்

கொண்டப்படி அன்றாடப்

பணியில்ஈடுபடத்

தொடங்கினாள் தாய் மாலதி.

        --- அய்யாறு.ச.புகழேந்தி