tamilnadu epaper

அமாவாசை

அமாவாசை

நட்சத்திரங்களால் ஒளிர்வதில்லை..

அமாவாசை என்பதை மறந்து
நிலவைக் காணவில்லை
என்று ஆதங்கம் கொள்வோரின்
மறதியை
எவரோ சுட்டுகையில்
எதிர்பார்ப்பு சுட்டுக் கொள்வது
என்பதெல்லாம் இயல்பே..!

மூன்றாம் பிறையின்
மறுநாளில் பௌர்ணமியைக்
காண விரும்புவோர்
முழுப் பைத்தியங்கள்..!

அதீத எதிர்பார்ப்புகள்
பல நேரங்களில்
அரைப் பைத்தியம்
ஆக்கிவிடுவதும் உண்டு…

வளர்பிறையினை
நிதம் இரசித்து
முழுமதியைக் காணும்வரை
பொறுமையினை ஏந்தியவர்கள்
முழுமதி கொண்டவர்களே
வான்மதியின் ஒளிர்வுடன்…!

எதிர்பார்ப்புகள்
நியாயமெனில்…
நம்பிக்கைப் பார்வைக்கெல்லாம்
பௌர்ணமி பரிபூரணமாய்..!          

-  முனைவர் பாலசந்தர் மண்ணச்சநல்லூர்