அமெரிக்கா விதித்துள்ள அதிகமான வரிகள் அந்நாட்டின் மோசமான பொருளாதார பிரச்சனைகளை வெளிப்படுத்துகின்றது என இலங்கை பொருளாதார நிபுணர் கருத்து தெரி வித்துள்ளார். வெளிநாட்டு இறக்குமதிகள் மீது டிரம்ப் விதித்துள்ள அதிகப்படியான வரிகள் ஏப்ரல் 9 முதல் அமலுக்கு வந்துள்ளது. இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 44 சதவீத வரி விதித்துள்ளது. இது அமெரிக்க முதலாளித்துவத் தின் ஆழமான பிரச்சனைகளை வெளிப்படுத்துவதாக வும் அதன் தாக்கம் கடுமையானது மற்றும் பரந்த அளவில் அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் பொருளாதார நிறு வனத்தின் பொருளாதார நிபுணர் தனுஷ கிஹான் பதிரண இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் கூறிய போது, இந்த வரிவிதிப்புகள் டிரம்பின் தற்செயலான கொள்கை மாற்றங்கள் அல்ல. மாறாக இது அமெ ரிக்க பொருளாதாரத்தின் அடிப்படை அமைப்புசார் நிலையற்ற தன்மையின் அறிகுறிகள். இது வெறு மனே டிரம்பின் தணிக்கைக் கொள்கை அல்ல. இது அமெரிக்க முதலாளித்துவத்தின் அமைப்புசார்ந்த நிலையற்ற தன்மையிலிருந்து உருவாகிறது. இது 2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு தோன்றிய நிலையாக இல்லாத நிதிப் பற்றாக்குறைகளுடன் தொடர்புடையது என்றும் அவர் அழுத்தமாக தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவை யைத் தக்கவைக்க பெரும் பற்றாக்குறைகளை சந்தித்து வருகிறது. அதாவது வருவாயை விட அதிக மாக செலவு செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது. டிரம்பின் இந்த வரிவிதிப்பு அமெரிக்காவில் மோசம டைந்து செயலிழந்து / மந்த நிலைக்கு செல்லும் பொரு ளாதார விளைவில் இருந்து உருவான எதிர்வினையா கும். டிரம்பின் இந்த நடவடிக்கைகள் ஒரு பெரிய நெருக்கடியின் அறிகுறிகள் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் வரி இலங்கையின் ஏற்றுமதித் தொழில்கள், குறிப்பாக முக்கிய சந்தையாகவும் வரிச் சலுகைகளை அதிகம் நம்பியுள்ள துறையாகவும் உள்ள ஆடைத் துறை கடுமையாக பாதிக்கப்படும் என்று பதிரண கூறினார். ஏற்கனவே அதிக உற்பத்திச் செலவுகள் மற்றும் குறைந்த உற்பத்தித் திறனுடன் உற்பத்தி துறையில் போராடி வரும் இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் இப்போது புதிய வணிக ஒப்பந்தங்கள் கிடைக்காமல் ஒப்பந்தங்கள் வேறு நாடுகளுக்கு செல்லும் அபாய நிலை உருவாகியுள்ளது. இதனால் அதிக உற்பத்தித் திறன் கொண்ட ஆயி ரக்கணக்கான இலங்கை தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தை எதிர்கொள் கின்றனர். இந்த வேலைகளைப் பாதுகாக்கவும், மாற்று வேலைவாய்ப்பை வழங்கவும் ஒரு ஒருங்கிணைந்த அரசு தலைமையிலான தொழில் திட்டம் அவசரமாகத் தேவைப்படுகிறது என்று பதிரண வலியுறுத்தியுள்ளார்.