12,மார்ச், அறந்தாங்கி
அறந்தாங்கி பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் ஒய்ஆர்சி யும் இணைந்து நடத்திய, ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை அவர்களின் வழிகாட்டுதல்படி, நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற நடைப்பயணம், ஆவுடையார்கோயில் காவல் நிலையத்திலிருந்து தொடங்கி நடைபெற்றது.
ஆவுடையார்கோயில் காவல் ஆய்வாளர் திருமதி விஜயலெட்சுமி அவர்களின் சார்பில், காவல் உதவி ஆய்வாளர் க. ஆறுமுகம் அவர்கள், நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்து, உடன் வந்தார்.ஆவுடையார்கோயில் காவல் நிலையத்தில் தொடங்கிய நடைப்பயணம், ஆவுடையார்கோயிலின் நான்கு வீதிகள் வழியாகச் சென்று, மீண்டும் காவல் நிலையத்திலேயே நிறைவு பெற்றது. நடைப்பயணத்தின்போது, 60 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வண்ணப்படங்கள் மற்றும் சமத்துவ நாள் உறுதிமொழி வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவண்ணம் நடந்து வந்தனர். நடைப்பயணத்தின் நிறைவில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு. பழனித்துரை, சமத்துவம் நாள் உறுதிமொழியை வாசிக்க, மாணவ, மாணவியர் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆவுடையார்கோயில் காவல் நிலைய காவல் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.