நவீன் செய்வதறியாது விழித்தபடியே. தின்டிவனம் பேருந்து நிலைய அவுட்டரில் நின்று கொண்டிருந்தான். யாாிடமாவது லிப்ட் கேட்டு ஊருக்கு போகவேண்டியதுதான் வேறு வழியில்லை
காதில் செல்போனை வைத்து பேசியபடியே வரும்போது வழிப்பறி திருடா்கள் செல்போன் ஹேன்ட், பேக் தோளில் மாட்டியிருந்தது, இரண்டும் பறிபோனது கையில் ஒரு ரூபாய் இல்லை, அனைவர் போன் நம்பரும் செல்லில் அடக்கம் என்ன செய்வதென விழித்தபடியே நின்று கொண்டிருந்தான்
பாவம் நவீன் கள்ளக்குறிச்சி சம்பவம் தொிந்தவுடன் பேக்டரிக்கு லீவு போட்டு விட்டுபஸ் ஏற வரும்போதுதான் களவு போனது,
யாாிடமாவது போன் இரவல் வாங்கி பேசலாம் என்றால் மனசும் சரியில்லை அதே நேரம் நம்பரும் நினைவுக்கு வரவில்லை, அப்போது சரக்கு லாாி ஒன்று போனது கையைக்காட்டி நிறுத்தினான்
முதலில் மறுத்த லாாி டிரைவர் பின்னா்எங்க போகனும் என்றான்? வண்டி பாண்டி வரை போகுது பின்னாடி கம்பிமேல குந்திக்க என்றான் நவீனே தொடர்ந்தான், நானு கள்ளக்குறிச்சி போகனும் என்றவுடன் டிரைவர் மனமிறங்கி முன்கதவைத்திறந்து விட்டான்
ஏறி அமர்ந்த நவீன் ரொம்ப தேங்க்ஸ் அண்ணே
செல்லு பணம் எல்லாம் போயிடுச்சி உங்க செல்லில பாக்கலாமா என்றான்
இது சாியா வராதுப்பா சாதா செல்லு இது
போற வழியில டீக்கடைல டிவி இருந்தா பாப்போம் என்றவாறே லாாியை ஓட்டினான் நவீன் மனது முழுவதும் கள்ளக்குறிச்சி வீட்டு நெனப்பாகவே இருந்தது டிரைவரிடம் புலம்பிய படியே வந்தான்
கிளீனா் சத்தம் போட்டான், தம்பி டிரைவர் கிட்ட பேசாம வா ஏதாவது குழப்பத்தில வண்டி ஆக்ஸிடென்ட் ஆகிடும் என்றான் மனது இருக்கமாகவே வந்தான் நவீன்,
நவீன் ஒரே பையன் கள்ளக்குறிச்சியில் கூறைவீடு அப்பா கூலிவேலை அம்மா நடவு ,நூறுநாள் வேலை இப்படித்தான்
நவீன் டிப்ளமா படித்துவிட்டு தின்டிவனத்தில் ரென்டு மாசமாத்தான் வேலை வாங்கற சம்பளம் அவனுக்கே இழுபறி
அப்பாவுக்கு குடிப்பழக்கம் உண்டு இருந்தாலும் மனசுல பயம் கவ்விக்கொன்டே இருந்தது அப்பாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என நினைத்தபடியே அழுகையை அடக்கிக் கொண்டே வந்தான்
லாாி ஜிப்மர் தாண்டியது
நவீன் பேசினான் அண்ணே வண்டிய ஜிப்மர் வாசல்ல நிறுத்துங்க நானு இறங்கிக்கறேன் என்று கூறி டிரைவருக்கு நன்றி கூறி இறங்கினான்
தம்பி நவீன் இந்தாப்பா இந்தபணத்தை வச்சுக்க என இருநூறுருபாயைக் கொடுத்தான். தேங்க்ஸ் அண்ணே எனக்கு வேண்டாம் நானு யாா்கிட்டேயும் பணம் வாங்கமாட்டேன் என புறப்பட்டான் ,தம்பி சொன்னா கேளுப்பா பான்டிலோ்ந்து கள்ளக்குறிச்சிக்கு எப்படிபோவ என்றான்
எப்படியும் அமரர்ஊா்தி போகும் அதில தொத்திக்கிட்டு போயிடுவேன் என புறப்பட்டான்
ஜிப்மரில் விசாாித்தான் கள்ளக்குறிச்சிலோ்ந்து கள்ளச்சாராயம் சாப்பட்ட பத்து போ் தங்கியிருக்காங்க இப்ப ரெண்டு பாடிய ஏத்திக்கிட்டு கள்ளக்குறிச்சி போவேன் என ஆம்புலன்ஸ் டிரைவர் கூறினான்
நவீன் தொடர்ந்தான் அண்ணே என தனக்கு நோ்ந்த கதையைக்கூறி அழுதவாறே தயவு செஞ்சு என்னைய கள்ளக்குறிச்சில இறக்குவிடுங்க என்றான்
சரி சரி கவலப்படாதே போய் மொதல்ல ஓபில போய் பாத்துட்டு வா உங்க அப்பா அட்மிட் ஆகியிருக்காறான்னு பாத்துட்டு வா கெளம்புவோம் என்றான்
ஓபில அவனுக்கு அதிா்ச்சி காத்திருந்தது அவனது நண்பன் குமாா் அழுதபடியே நவீன் அருகே வந்து
எல்லாமே போச்சுடா எங்க அப்பா உசிறு ஊசலாடுது மனச தேத்திக்கடா உங்க அப்பாவும் அம்மாவும் செத்துப் போயிட்டடாங்க பாடி போஸ்ட்மாா்ட்டம் செய்யப் போயிருக்கு என்றான் குமாரு
நவீனுக்கு மயக்கமே வந்தது ஒருமணிநேரம் கழிச்சு அமரர் ஊா்தியில் அம்மா அப்பா பூதஉடலோடு பயணித்தான்
தன்கனவனை குடிக்காதே என அறிவுரை சொல்லும் அம்மாவும் சோ்ந்து சாப்பிட்டு செத்துப்போயிட்டாங்க
சே அம்மாவா! இவங்க அம்மாமீது இருந்த பாசம் முழுவதுமாக வெறுப்பானது, உடல்கள் வீட்டில் இறக்கி வைக்கப்பட்டன செய்திஅறிந்து சொந்த பந்தங்கள் வீட்டில் சோரேகை படிய காத்திருந்தாா்கள்
சித்தப்பா தங்கவேலு நவீனைப்பாா்த்து ஏன்டா போனை ஆப் பண்ணி வச்சிருக்க காலைலோ்ந்து டிரைப்பண்ணிணோம் உனக்கு எப்படி சேதி தொியும் நடந்தவிஷயங்களை சொன்னான்
சரிசரி போயி விஏ வுக்கிட்ட பதிவு செஞ்சிட்டு வருவோம் வா என நவீனுடன் புறப்பட்டாா் சித்தப்பா !
திடீரென ஊரே பரப்பரப்பானது
விசாாிப்பு காரர்வந்து மந்திாி ,கலெக்டா் வர்ராங்க இறந்து போனவங்களுக்குதலா பத்துலட்சம் கொடுக்கறாங்க ஆதாா்காா்டோடு ரெடியா இருங்க என சொல்லிவிட்டு சடங்குகளை முடிச்சுடுங்க பிரேதங்களையெல்லாம் கவர் மென்ட ஏற்பாட்டில ஒரே இடத்தில அடக்கம் செஞ்சிடுவோம் என்றான்
நவீன் கோபம் தலைக்கேறியது ஏதோ சிந்தனையில் சடங்குகளைச் செய்தான்
ஒருமணிநேரத்தில் மந்திாி ,கலெக்டா் வந்தாா்கள் நவீனிடம் கையொப்பம் வாங்கிக்கொண்டு காசோலையைக் கொடுத்தாா்கள்,காசோலையை வாங்கிக் கொன்ட நவீனோ மந்திாி, கலெக்டரைப் பாா்த்து அய்யா எங்க அப்பாவும் அம்மாவும் கள்ளச்சாராயம் குடிச்சு செத்து போயிட்டாங்க அவங்க சுதந்திர போராட்ட தியாகியா? அதிலேயும் எங்க அம்மா புருஷனோட சோ்ந்து குடிச்சதை என்னால தாங்க முடியல அதோட புருஷனை குடிக்காதேன்னு சொல்லி திருத்தற வேலைதான் மனைவியோடது
அவங்களே தப்பு செஞ்சதை என்னால ஜீரணிக்க முடியலே அதனால என்கிட்ட கொடுக்கற பணத்தை கேஷ் பண்ணி எதிா் வீட்ல இருக்கற சுதந்திரப் போராட்ட தியாகி பழனிச்சாமியோட பேரப் புள்ளைங்க எந்த சலுகையும் கிடைக்காம பாட்டிதான் வளா்க்கிறாங்க சாப்பாட்டுக்கே கஷ்டப் படறாங்க அதிலேயும் ஒரு பேத்தி உடல் ஊனம், அடுத்த பேத்தியோ ஆட்டிசம், அதனால எனக்கு கொடுக்கற பணத்தை அவங்ககிட்ட கொடுக்கப்போறேன் நீங்களே பிரேதங்களை அடக்கம் செஞ்சிடுங்க என சொல்லிவிட்டு தியாகி வீட்டுகு போயி பாட்டியை அழைத்துக்கொன்டு வஙகியை நோக்கி நடந்தான், ஊரே அவன பொிய ஹீரோவாகப் பாா்த்தது
ஆா்.நாகராஜன் செம்பனாா்கோவில்