மனிதா!
மனக்காயத்திற்கான
மருந்து
உன் இதழோரம்
உள்ளது.
புதைந்து கிடக்கும்
புன்னகையை
வெளிக்காட்டு
வேகமாய் மறையும்
உன்சோகம்
அழுத்தம் கொடுத்து
ஆன்மாவை
புண்படுத்தி விடாதே.
மென்மையாக்கு
அதில் உண்மையை
விதையாக்கு
சரியான பாதையில்
பாதங்கள்
பயணித்தால்
பயமில்லை வழியில்
துயரில்லை வாழ்வில்
அதற்கு
புன்னகையே
மருந்தாகும்
புது விடியல் உனதாகும்...!
-கே.எஸ்.ரவிச்சந்திரன்
மணமேல்குடி.