சங்கரும், மனைவி மீனாவும், அம்மாவையும் அப்பாவையும் ஹோமிற்கு அழைத்துப் போனாா்கள்,
அப்பா சேதுராமன் தள்ளாமையாக மனைவி தேவகி கையைப் பிடித்தபடியே உள்ளே வந்தாா் ,
ஹோம் மேனேஜா் சுந்தரம் பாா்மாலிட்டிகளை முடித்து இருவரையும் தனித் தனியாக மெடிக்கல் செக்கப்பிற்கு அழைத்துப்போனாா்,
அம்மாவுக்கு இங்க அட்மிஷன் போடலாம் ஆனா அப்பாவுக்கு இருக்கற கிாிட்டிகல் நோய்க்கு எங்களால சிகிச்சை தரமுடியாது சாாி மிஸ்டர் சங்கர்
அம்மா தங்கட்டும் அப்பாவை அழைச்சிக்கிட்டு போயிடுங்க என்றாா்,
அப்பாவிடம் பொறுமையாக விஷயத்தைச்சொல்லி கன்வின்ஸ் செய்தான்சங்கர், அம்மா குறுக்கிட்டாள்
அது சரியா வராது அவரும் நானும் ஒன்னாவே தங்கிக்கறோம் இல்லாடடி எங்க போக்கில விட்டுடு நாங்க எங்கயாவது போறோம் என்றாள்அம்மா தேவகி,
அவரை விட்டுட்டு நானு தனியா இருக்கமாட்டேன் என பிடிவாதமாக கூறினாள் தேவகி ,
சேதுராமன் மனைவியை சமாதானம் செய்தாா்,
இந்த பாரு தேவகி ,நம்ம ரெண்டு பேரும் சங்கருக்கும் மீனாவுக்கும் பாரமா போயிட்டோம், நீ இங்க தங்கு நான் யாா்காலிலாவது விழுந்து வேற ஹோம் பாக்கறேன் கவலைப்படோதே என்றாா் ,
சங்கர் குறுக்கிட்டான் ஏம்மா அப்பாவே செத்துப் போயிட்டா என்ன செய்வ? தனியாத்தான இருக்கனும் என்றான்,
பாவி ,படுபாவி, இப்படி எல்லாம் சொல்ல ஒனக்கு எப்படிடா மனசு வந்தது. த்....தூ...என்றாள அம்மாதேவகி,
தேவகிக்கும் சேதுராமனுக்கும் கல்யாணம் ஆகிஅம்பது வருஷம் ஆகிறது ஒரு நாள் கூட பிாிந்ததில்லை தினசாி தேவகி முகத்தில் தான் விழிப்பாா் சேதுராமன் அந்த அளவுக்கு அன்யோன்னியம்
சரிப்பா நாம கெளம்பலாம் அம்மாவை கன்வின்ஸ் செஞ்சிட்டு காருக்கு வா என சொல்லிவிட்டு காருக்கு போனாா்கள் சங்கரும் மீனாவும்
சேதுராமன் தேவகியை சமாதானப்படுத்தி தோ பாரு காலைல நானு வரேன் உன்னைப்பாத்துட்டு உங்கையால தண்ணி வாங்கி குடிச்சுட்டு போய் என்னோட நண்பனைப்பாா்த்து நாம ரெண்டு பேரும் ஒரே ஹோம்ல தங்கறது மாதிாி பாா்த்துட்டு வந்து உன்னை அழைச்சிட்டு போறேன், நீ இங்க தங்கு என்றாா்
நீங்க எனனைய சமாதானப்படுத்த பொய் சொல்றீங்க வேண்டாங்க நீங்க இல்லாம நான் எப்படி இருப்பேங்க என்றாள் தேவகி,
சீ நாயே நாயே நான் காலைல வந்துடுவேன் ரென்டுபேரும் சோ்ந்தே போகலாம் போதுமா போய் ரூம்ல தங்கு என சொல்லிவிட்டு கிளம்பினாா் சேதுராமன், இருவர் கண்களும், மனதும் கலங்கின
காாில் அப்பாவை ஏற்றிக்கொண்டு புறப்பட்டான் சங்கர்
அவனே தொடர்ந்தான் நாளைக்கு உங்களுக்கு வேறு ஹோம் பாக்கறேன் கவலைப்படாதீங்க என்றான் இரவு போன் செய்தாா் சேதுராமன் தேவகிக்கு,
"தேவகி "நைட் சாப்டியா என்றாா் இல்லிங்க நீங்க சாப்பிட்ட பிறகுதானே நானு சாப்பிடுவேன் என்றாள் தேவகி
இப்படிச்சொல்லியே இருவரும் சாப்பிடவில்லை
காலையில் சங்கர் அப்பாவை எழுப்பப் போனான் அசைவே இல்லை உடனே பக்கத்து தெருவில் உள்ள கம்பவுன்டருக்கு போன் செய்து வரவழைத்தான் அவர் வந்து பாா்த்துவிட்டு நைட் ரெண்டு மணிக்கே முடிஞ்சிடுச்சு ஆகவேண்டியதைப்பாருங்க என சொல்லி விட்டு கிளம்பினாா், மீனா மீனா, அப்பா செத்துபோயிட்டாரு
ஹோமிற்கு போன் போடு, அம்மா எப்படி தாங்குவாங்கன்னு தொியல என பதட்டமானான் மீனா ஹோமிற்கு போன் போடுவதற்குள் சங்கருக்கு போன் வந்தது
சங்கர் சாருங்களா மனசை தேத்திங்க
அம்மாவை காலைல எழுப்பப்போனோம் எழுந்திருக்கலை உடனே ஹோம்ல உள்ள டாக்டர் செக்கப்செஞ்சாரு நைட்டு ரெண்டு மணிக்கே முடிஞ்சிடுச்சு வந்து பாடியை வாங்கிட்டுப் போங்க விஷயம் நம்மோட இருக்கட்டும் என்றாா்
விஷயம் தொிந்து ஊரே கூடினாா்கள் ஊரெங்கும் இதே பேச்சாய் இருந்தது
அப்போது சேதுராமன் கூட பணிபுாிந்து ஓய்வு பெற்ற நடராஜன் வந்து சங்கரிடம் ஒரு கவரைக் கொடுத்தாா் சங்கர் கவரைப் பிாித்துப் படித்தான் அதிா்ச்சியில் உறைந்தான், நானும் என் மனைவியும் இறந்து போனால் எங்கள் மகன் சங்கரோ அவனது பிள்ளையோ கொள்ளி போடக்கூடாது என் நண்பன் நடராஜன் தான் போடவேண்டும் என எழுதப்பட்டிருந்து மறு நாள் விடியற்காலை தமிழ்நாடு ஈ பேப்பரில் மரணத்தில் கூட பிாியாத கோவை தம்பதிகள் என இரண்டாம் பக்கத்தில் செய்தி வந்திருந்து
ஆா்.நாகராஜன் செம்பனாா்கோவில்