இந்தியாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் உட்பட 18 நபர்களுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) சமூக உயிர்காப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் (ஏப்ரல் 8) சிங்கப்பூரில் கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 16 குழந்தைகள் மற்றும் 6 நபர் களை காப்பாற்றியதற்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நியூட்டன்ஷோ கேம்ப் என்ற அமைப்பு நடத்தி வரும் குழந்தைகளின் அறிவு செறிவூட்டல் மையம் அமைந்துள்ள மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் ஏழு வயது மகனும் இருந்தார். ஆறு முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 23 முதல் 55 வயதுக் குட்பட்ட ஆறு பெரியவர்களை தீய ணைப்புக் குழு வரும் வரை காத்திருக்கா மல் உடனடியாக மீட்பு பணியில் ஈடு பட்டு மீட்ட தொழிலாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.