இந்தியாவின் நிதி அமைப்பு நெகிழ்வுத் தன்மை கொண்டது என ஐஎம்எப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் நிதி அமைப்பு, விரைவான பொருளாதார வளர்ச்சியால் உந்தப்பட்டு மிகவும் நெகிழ்ச்சியுடனும், மாறுபட்டதாகவும் மாறியுள்ளது. இந்திய நிதி அமைப்பு 2010-களின் உலக பெருமந்த நிகழ்வுகளில் இருந்து மீண்டெழுந்து பிறகு 2020-ல் கோவிட் பேரிடரையும் வலிமையாக தாங்கிக் நின்றது. வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் சந்தை நிதியுதவி வளர்ச்சி கண்டுள்ளன. இதில், பொதுத் துறை நிதி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
பலவீனமான சூழல்கள் இருந்தபோதிலும், முக்கிய கடன் வழங்கும் நிறுவனங்கள் சிறிய அதிர்ச்சிகளை தாங்கி மீண்டெழும் தன்மை கொண்டவையாக உள்ளன. அதற்கான போதுமான மூலதனத்தை வங்கிசார நிதி நிறுவனங்கள் கொண்டுள்ளன
இருப்பினும் பல வங்கிகள், அதிலும் குறிப்பாக பொதுத் துறை வங்கிகள் இத்தகைய சூழல்களில் கடன் வழங்குவதற்கு தங்கள் மூலதன தளத்தை இன்னும் அதிகமாக வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு ஐஎம்எப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.