tamilnadu epaper

இனிய நந்தவனம் சர்வதேச புத்தக தின சிறப்பிதழ் அறிமுக விழா

இனிய நந்தவனம் சர்வதேச புத்தக தின சிறப்பிதழ் அறிமுக விழா


திருச்சி ஏப்7,

இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு மாத இதழ் சர்வதேச புத்தக தின சிறப்பிதழ் அறிமுக தின விழா திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நூலகத்தில் நடைபெற்றது.

        

உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படுகிறது. புத்தகங்களை வாசிப்பதற்கும் வெளியிடுவதற்கும் மக்களை ஊக்குவிப்பதற்காகவும் விழிப்பூட்டுவதற்காகவும் சர்வதேச புத்தக தினம் கடைபிடிக்கப்படுகிறது.


சர்வதேச புத்தக தின விழாவை முன்னிட்டு இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு மாத இதழ் உலக புத்தக தின சிறப்பிதழை வெளியிட்டுள்ளது.


இனிய நந்தவனம் ஆசிரியர் சந்திரசேகரன் சிறப்பிதழை வழங்க 

அவேர்னஸ் அப்பா அம்மா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அவேர்னஸ் அப்பா, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், ஒயிட் ரோஸ் மக்கள் நலச் சங்க தலைவர் முனைவர் சங்கர் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.