பூக்கள் நடனமாடியது
நடனஇயக்குனர்
காற்று.
தீபம் எரிவதும் அணைவதும்
இவன் செயல்
காற்று.
ஓய்வெடுத்தன
மின்விசிறிகள்
மழைக்காலம்.
'நன்றியுள்ள பிராணி நாய்'
தெருநாய்களால் அல்லல்படும்
மக்கள்.
இருட்டில் ஒளிந்தது
வெளிச்சத்தில் தெரிந்த
நிழல்கள்.
இளைஞர்களுக்கு. வழி விடும் முதுமைகள்
சருகுகள்.
குழந்தைகளின்
கண்காணிப்பில்
பொம்மைகள்
காதல் பறவைகளாம்
விற்கிறார்கள்
சுதந்திரத்தை பறித்து
-சுகபாலா,
திருச்சி.