tamilnadu epaper

கடவுச்சொல்

கடவுச்சொல்


கடவுச் சொல் அது ஒரு

உடமைச் சொல். 

உடமை காக்கும் கதவுச் சொல். 

கதவைத் திறக்கும் பூட்டுச் சொல். 

பூட்டைத் திறக்கும் திறவு கோலாகும். 

திறவு கோல் தொலைந்தால் 

தொலையும் மிகு பொருள். 

கடவுச் சொல் பாதி காதலி பெயரே. 

காதலில் தோற்றால் உடையும் இதயம். 

கடவை இழந்தால் விடை பெரும் நிதியம். 

இரகசியம் காத்தலில் கடவும் களவும் ஒன்று. 

மறைத்து வைத்தல் சாலவும் நன்று.!!


-பாலகிருஷ்ணன். ஆர்

பொள்ளாச்சி.