tamilnadu epaper

இன்பம் எங்கே தேடுவாய்?

இன்பம் எங்கே தேடுவாய்?


ஆறறிவு பெற்ற மனிதா

அனைத்து உயிர் மீது 

அன்பு செலுத்தாமல்  

பண்புடன் இருப்பவர்கள் மீது 

களங்கம் கற்பிக்கிறாயே!


பொன்போன்ற காலத்தை 

புகைபோக்கிக் கழிக்கிறாய் 

கெடுவான் கேடு நினைப்பான்

எடுத்து நாளும் சொன்னாலும் 

அடுத்தவன் குடியை கெடுக்கிறாய்

நல்லதை மறந்து திரிகிறாய்!

  

நாளும் தொழிலாளி உழைக்கின்றான் 

நல்லதோர் குடும்பம் அமைத்து 

இன்பமுடன் வாழுகின்றான் 

அவன் உழைப்பை சுரண்டி

ஆடம்பரமாய் வாழ நினைக்கிறாய்!


உலகப்பொதுமறை காட்டிய நீதி 

உத்தமர்கள் வாழ்ந்து காட்டிய வழி

அல்லவை தேய அறம் பெருகும்

வாய்மையே நாளும் வெல்லும் 

ஆன்றோர்கள் உரைத்த மொழிகள் 

உன்முன்னே கொட்டிக் கிடக்கிறது!

 

மனம்போன போக்கில் நாளும் 

மனிதன் திரிந்து வாழ்வதால்  

மனிதா மகிழ்ச்சி எங்கே?

மண்ணில் இருக்கு என்று தேடுவாய்?


 

-பூ.சுப்ரமணியன் 

பள்ளிக்கரணை,

சென்னை