tamilnadu epaper

இறுதிவரை

இறுதிவரை


    ' எவ்வளவு நாளாக இப்படியே இருப்பது? இவளும் மனுஷி தானே! இவளுக்கும் நம்மைப் போன்ற உணர்வுகள் இருக்கத்தானே செய்யும்.' _இன்று அவளிடம் இந்த விஷயத்தை பேசிவிட வேண்டியதுதான்... என்று மனதிற்குள் ஒரு தீர்க்கமான முடிவோடு தனது மருமகளின் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் கௌரிஅம்மாள். "உன்னை மருமகளா நினைக்கல உமா, மகளா தான் நினைக்கிறோம்! நாங்க சொல்றதுக்கு சம்மதிக்க வேண்டும்!" _என்றாள் கௌரியம்மாள்.

 உமா அதிறந்தாள்.உள்ளம் துடித்தது. அவர்களின் ஒரே மகன் ரவி. ஏர்போர்ட்டில் வேலை. உமாவை மணந்து கொண்டான். விமான போக்குவரத்தில் இருந்தவன் ஆங்கிலேய பெண் ஒருத்தியை காதல் திருமணம் செய்து கொண்டான்.

ரவியின் அப்பா _அம்மா இருவரும் மகனை வெறுத்தனர் .அவனுக்கு பாடம் புகட்ட உமாவை மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர். அதற்குத்தான் கௌரிஅம்மாள் சம்மதம் கேட்கிறார் .

"உன் கண்ணுக்கு முன்னாலே அவன் ஒருத்தியோட வாழுறான் .அவன் கண்ணுக்கு முன்னால நீ ஒருத்தன் கூட வாழனும். அதுதான் என் மகனுக்கு நீ தரும் தண்டனை !இதை மறுக்கக் கூடாது"

 மெலிந்த குரலில் பேசினாள் .

"நீங்க மாமியார் இல்லை ,தாய் தான்! மதிக்கிறேன். உங்க மகன் என்னை மறந்து இருக்கலாம். நான் மறக்கவில்லை. தாயை விட்டுப் பிரிய மகளுக்கு மனசு வருமா ?வராது! நான் உங்களோடவே இறுதிவரை இருந்து விடுகிறேன். உமா சொல்ல ,கௌரி அம்மாள்அவளை கட்டிக் கொண்டாள்.



-வெ. தமிழழகன்,

சேலம்