பொள்ளாச்சி,அரிமா சங்கக் கட்டிடத்தில் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 121 வது இலக்கிய சந்திப்பு 21.07.2024 இல் நடைபெற்றது. இச்சந்திப்பில் எழுத்தாளர் அய்யனார் ஈடாடி எழுதிய ' மூதூர்க் காதை' சிறுகதை நூல் வெளியிடப்பட்டது.
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செயாலாளர் கவிஞர் பூபாலன் வெளியிட பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவர் அம்சப்ரியா, கவிஞர் சுடர்விழி , கவிஞர் சிவக்குமார் கணேசன், கவிஞர் இளையவன் சிவா கவிஞர் கார்த்திக் திலகன், கவிஞர் நிலாதரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கவிஞர் புன்னகை பூ.ஜெயக்குமார் வரவேற்புரை வழங்கினார்.
கவிஞர் சுடர்விழி மூதூர்க் காதை நூலைப் பற்றி அறிமுக உரையாற்றினார்.
மூதூர்க் காதை நூலின் ஆசிரியர் எழுத்தாளர் அய்யனார் ஈடாடி மதுரை வட்டார கிராமத்து மக்களின் வாழ்வியல் கதைகள் என்று ஏற்புரை வழங்கினார். விழாவில் பொள்ளாச்சி இலக்கிய ஆர்வலர்களும் பொது மக்களும் ,கோவை வசந்தவாசல் கவிமன்றத்தின் கவிஞர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.