மாறும் காலங்களே
மாற்றத்தின் ஆதாரம்!
செழித்து வாழ்ந்தோர்
சிரமத்தில் வீழ்வதும்,
ஏழ்மைச் சீடர்கள்
ஏற்றத்தில் நிமிர்வதும்
காலத்தின் விளையாட்டு
கட்டாயக் கோட்பாடு!
மாறாது நிலைப்பவை
எதுவுமில்லை பூமியில்,
மனிதமனமும் சூழ்நிலைக்கு
ஏற்றாற் போலிருப்பது,
உலகத்தின் நியதி
உணரவியலா சக்தி!
இலையுதிர்க் காலமும்
நிலையல்ல உணர்வாய்!
வசந்த காலத்தின்
முகப்புத் தோரணம்!
-முகில் தினகரன்,
கோவை