tamilnadu epaper

ஈடுபாடு

ஈடுபாடு

 

  " பக்காவா பட்ஜெட் போட்டு சிக்கனமா குடும்பம் நடத்தறதுல பலே கெட்டிக்காரர் அரசாங்க வங்கியில கிளார்க் வேலை பார்க்கும் சிங்காரம் .

 

     " அதுக்கு காரணம் அவருக்கு நாலு பசங்க , இரண்டு பையன் , இரண்டு பொண்ணு மனைவின்னு பெரிய குடும்பம் . பணத் தட்டுப்பாடு கொண்ட வறுமையான குடும்பம் தான் . "

 

 

     'பசங்க படிப்பு செலவு குடும்ப செலவு இது போக சொற்ப பணம் தான் கையில மிஞ்சும் , அதுவும் மாதக் கடைசின்னா சிங்காரம் முகம் வாடி வதங்கி போய்விடும்.

 

           இதுல பசங்களுக்கு பாக்கெட் மணிங்கறது நினைத்து பார்க்க கூட இயலாத விசயம் கானல் நீர் மாதிரி தான்.

 

     " அன்று முகத்தில் ஜொலிப்பும் , மனதில் மகிழ்ச்சியும் தவழ்ந்து சரிய இருந்த சிங்காரம் என்னிக்கும் இல்லாத அன்னிக்கு தன் பிள்ளைகளுக்கு டபுளா பாக்கெட் மணி கொடுத்து அனுப்பினார் . 

 

  " தன் மனைவிக்கு ஸ்பெஷல் புடவை மற்றும் ஸ்வீட் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார் . " வீட்டில் கலகலப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இல்லை .

 

    " வீடே ஆச்சரியத்தில் மூழ்கி வானத்தை பார்த்தது இடி மின்னல் மழை வருதான்னு தேடிக் கொண்டிருந்தது .

புரியாத மகிழ்ச்சியும் ஆனந்தமும் தாண்டவமாடியது அவர் வீட்டில் என்றும் இல்லாத வண்ணமாக இன்று .",

 

   " ஆனால் சிங்காரத்தின் உள் மனதிற்கு மட்டும் நன்றாக புரிந்தது , மனம் மகிழ்ச்சியில் இனித்ததற்கு காரணம் இனி குடும்ப கஷ்டம் குறைய வழி செய்தது ஊதிய உயர்வு தான் என்பதால் தன் பதவி நாற்காலியை ஆனந்த கண்ணீரால் நனைத்தார் சிங்காரம் . சிங்காரத்திற்கு வேலையில் ஈடுபாடு பல மடங்கு கூடியது வீட்டின் வரவு - செலவு பாரம் குறைந்த சந்தோஷத்தில் ..."

 

- சீர்காழி. ஆர். சீதாராமன் .

  9842371679 .