அந்த குடும்பத்தின் மூத்த பெண் ராணி ஒரு தம்பி ஒரு தங்கை பத்தாம் வகுப்பு வரை தான் படித்திருந்தாள்" />
"அந்த குடும்பத்தின் மூத்த பெண் ராணி ஒரு தம்பி ஒரு தங்கை பத்தாம் வகுப்பு வரை தான் படித்திருந்தாள் ராணி . தாய் - தந்தைக்கு கூலி வேலை தான் .
" சில ஆண்டுகளுக்கு பிறகு தாயும் தந்தையும் உடல் நலக் குறைவால் இறந்து விட குடும்பப் பொறுப்பு ராணியிடம் வந்தது . தன் தங்கை தம்பி படிப்பு குடும்ப செலவு என கழுத்தை நெரித்தது ராணிக்கு.
" நடை பாதை வியாபாரியான விமல் இரண்டு வயது ராணியை விட அதிகம் உள்ளவன் . மிகவும் நல்லவன் நட்பு பாராட்டி ராணி குடும்பத்தில் அக்கறை காட்டினான் அனாதையான விமல் .... "
" ஒரு மனதாக முடிவெடுத்த ராணி வாகன ஓட்டுனர் பயிற்சி எடுத்து , லைசென்ஸ்சும் வாங்கினாள் ...."
" ஒரு லோன் வாங்க விமல் வழி காட்டினான் , ஆட்டோ வாங்கினாள் ராணி. வருமானம் நன்கு வரவே தன் தம்பியை தங்கையை படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்தாள் ஆட்டோ ராணி. தன் திருமண விசயத்தில் கரையாத பாறை போல் இருந்தாள் ராணி ...."
"தன் ஆட்டோவை காதலித்து திருமணமும் செய்து கொண்டு விட்டாள் ராணி .... "
" இப்போது வருமானத்திற்காக ஆட்டோ ஓட்ட வில்லை ஏழை எளியவர்களுக்கு முடியாதவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ஆட்டோ ஓட்டினாள் ராணி .... "
" வயது கடந்தும் நட்பு பாராட்டி அத்து மீறாமல் மரியாதையோடு பல ஆண்டுகள் நடந்து கொண்ட அனாதை விமலுக்கு தன் கழுத்தை நீட்டினாள் தாலிக்காக அல்ல, தரமான நெடுநாள் உதவிக்கரத்தை
உறுதிபடுத்த ஈரமான மனதுடன் ராணி ...."
- சீர்காழி. ஆர். சீதாராமன் .