tamilnadu epaper

உக்கல் அருள்மிகு மடாவளம் காமாட்சி அம்பாள் கோயிலில் ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா:

உக்கல் அருள்மிகு மடாவளம் காமாட்சி அம்பாள் கோயிலில் ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா:


பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்.


செய்யாறு மே .3,


செய்யாறு அடுத்த உக்கல் மடாவளம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா விமர்சையாக நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம், காஞ்சிபுரம் -வந்தவாசி நெடுஞ்சாலையில் கூழமந்தல் அடுத்துள்ளது உக்கல் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயில் எழுந்தருளி உள்ளது.


இக்கோயிலில் மூன்றாம் பிறை சந்திர தரிசன நிகழ்வு பிரசித்தி பெற்ற நிகழ்வாக உள்ளது .இதேபோன்று ஸ்ரீ ஆதிசங்கர ஜெயந்தி விழா விமர்சையாக நடைபெறுவதும் வழக்கம்.


நேற்று அம்பாள் சன்னதியில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் ஜெகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் சிலைக்கு சிறப்பு அபிஷேகமும் ,ஆராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 108 வலம்புரி சங்கு அபிஷேகம் ,யாகசாலை வேள்வி ஆகியவற்றினை ஆலய குரு சங்கர் குருஜி வழிகாட்டுதலில் நடத்தப்பட்டது.


ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தியி பங்கேற்ற திரளான பக்தர்கள் குருவருள் பெற்று ஆனந்தம் அடைந்தனர் நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாட்டினை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.