tamilnadu epaper

உதவியின் ஒளி

உதவியின் ஒளி

மருதன் பார்ப்பதற்கு ஏழை வீட்டு பையன் போல் இருக்கிறான். கரை படிந்த சட்டை, எளிமையான தோற்றம். ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்மறையாக இருக்கிறான் பாலாஜி. இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். மருதன் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், பாலாஜிக்கு அது பிடிக்காது. பாலாஜி எல்லா இடங்களிலும் மருதனை தரக்குறைவாகவே பேசுவான். மருதன் ஏழ்மையான நிலையில் இருந்தாலும் கூட, உதவும் மனப்பான்மை கொண்டவன். ஆனால் பாலாஜி கஞ்சன்; உதவி என்று யாரும் கேட்டால், “என்னால் முடியாது” என்பதே அவனுடைய பதில்.

 

பாலாஜியின் சொந்த அலுவலகத்தில் மருதன் பியூன்னாக வேலை பார்த்தான். தினமும் மிதிவண்டில் செல்லுவது தான் மருதனின் வழக்கம். ஒரு நாள், சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது, ஒரு 50 வயது நபர் விபத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் விழுந்து கிடந்தார். அதனை பார்த்த மருதன், அவரை மருத்துவமனையில் சேர்த்து, உறவினர்களுக்கு செய்தி சொல்லி விட்டு, அலுவலகத்திற்கு சென்றான். இதனை கேள்விப்பட்ட பாலாஜி, “உனக்கு வேலை விட தர்மம் முக்கியமா? அந்த வேலையை பார்” என்று மருதனை வேலையை விட்டு நீக்கிவிட்டான்.

 

சில மாதங்கள் வேலை தேடி அலைந்த மருதனுக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. மனைவியின் வருமானத்தில் பிள்ளைகளை படிக்க வைத்து வந்தான். எப்போதும் டீ கடையில் செய்தி தாள் படிப்பது வழக்கம். ஒரு செய்தி தாளில் வேலை ஆட்கள் தேவை என்று ஒரு விளம்பரம் பார்த்து, தன் கையில் எடுத்து கொண்டு பட்டணம் சென்றான். அங்கும் வேலை கிடைக்கவில்லை. விரக்தியில் வெளியே வந்தவனுக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. பியூன் வேலைக்கு சென்ற அவனை மேலாளர், “கிடைத்தது விட்டது” என்று ஒரு குரல் கொடுத்தார். ஆச்சரியத்துடன் ஏன் எனக்கு இந்த வேலையை கொடுத்தனர் என்று புரியாமல் முதலாளியிடம் கேட்டான் மருதன். அப்போது அவர் சொன்ன பதில், “நான் அன்று உயிருக்கு போராடிய போது நீ மட்டுமே என்னை காப்பாற்ற முன்வந்து என்னை மருத்துவமனையில் சேர்த்தாய்” என்றார். இதுவே மனிதனின் எதிர்வினை.

                     கவிஞர் பா. குரு