tamilnadu epaper

உருது மொழிக்கு தடை விதிக்க முடியாது

உருது மொழிக்கு  தடை விதிக்க  முடியாது

உருது மொழி வெளி உலக மொழி அல்ல. உருது மொழியை இந்திய மக்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் காத்தூர் பேரூ ராட்சி அலுவலக கட்டிடத்தின் பெயர் பலகையில், உருது மொழியை எழுத எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் ஒருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக் கல் செய்தார். இந்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் உருது மொழி வேற்று கிரக மொழி அல்ல, அது இந்த நாட்டில் பிறந்த மொழி, அதனை பயன்படுத்த எந்த தடை யும் விதிக்க முடியாது என்று கூறி மனு வை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மொழி மதத்தை குறிப்பது அல்ல, மொழி ஒரு சமூகத்துக்கானது. ஒரு பிராந்தியத்துக்கு சொந்தமானது என்று தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட் டுள்ளது. மேலும் இந்திய நாட்டின் பன்முகத்தன்மை மகத்தானது. அந்த பன்முகத்தன்மை தான் நமது பலம். பன்முகத்தன்மையை மதித்து மகிழ வேண்டும். இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் 22 பட்டி யல் மொழிகள் உள்பட 234 தாய் மொழி கள் உள்ளன. உருது மொழி இந்தி யாவில் அதிகம் பேசப்படும் 6வது மொழி என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.