tamilnadu epaper

உறக்கம்

உறக்கம்


உழைக்கும் வர்க்கத்திற்கு

இறைவன் தரும் இலவசபரிசு!


ஏழை எளியோரின்

உற்றத் தோழன்!


செல்வந்தர்களுக்கு

ஏங்கியும் கிடைக்காத எட்டாக்கனி!


வஞ்சக நெஞ்சத்தினருக்கு

வாழ்நாள் பகைவன்!


நோயுற்றவர்க்கு

தற்காலிக  வலிநிவாரணி!


முதியோர்களுக்கு

அரவணைக்கும் தேவதை!


காதலர்களுக்கு 

விடியும் வரை திறந்திருக்கும்

பூலோக சொர்க்கம்!


மனசாட்சியை கொன்றவருக்கு

மகேசன் தரும் தண்டனை!


ஆகவே வெள்ளை மனதுடன் 

வாழ்வோம்!


வெளுக்கும் வரை

தூங்குவோம்!


-ரேணுகா சுந்தரம்