tamilnadu epaper

எறும்பு எங்கே போனது!

எறும்பு எங்கே போனது!


எனது போனில்

சிற்றெறும்பு நடந்துப்

போவதைப் பார்த்தேன்

போனை கையில்

எடுத்தபோது

சிற்றெறும்பை காணவில்லை

சார்ஜர் துவாரத்தின்

வழியாக பார்த்தேன்

ஒன்றும் தெரியவில்லை

போனின் சார்ஜர் துவாரத்தை

ஏதாவது சத்தம்

கேட்கிறதாயென்று

காதில் வைத்துப் பார்த்தேன்

இப்போது கடகடவென்று

கடுமையான சத்தம்

ஐயோ அந்த சித்தெறும்பு

இப்போது என் காதுக்குள்

போய்விட்டது!



-சின்னஞ்சிறுகோபு,

 சிகாகோ.