tamilnadu epaper

ஒரு நாள் நீட்டி

ஒரு நாள் நீட்டி


காலண்டரில்,

ஜனவரி, மார்ச், மே, ஜூலை,

ஆகஸ்ட், அக்டோபர், டிசம்பர் 

மாதங்களை

முகச்சுளிப்புடன் திருப்பும்

அம்மாவின் 

அகப்பார்வை புரியாமல் கேட்டேன்.

' அப்பாவின் சம்பளம்

வங்கிக் கணக்கில் நுழைய

ஒரு நாள் தள்ளிப் போகுமே..

சமையல் அறையில் இருந்து 

குளியல் அறை வரை

வறட்சியின் தாக்கம்

வாட்டி எடுக்குமே கண்ணா!'

என்றாள்,

எதார்த்த அடிபட்ட சோகத்தில்..!


நெல்லை குரோன்

பொட்டல் புதூர் 

தென்காசி மாவட்டம்