tamilnadu epaper

ஒரு வீடு -ஒரு கனவு

ஒரு வீடு -ஒரு கனவு


பணம் படைத்தவனுக்கு பளிங்கு கல் மாளிகை./

பண்டாரம் பரதேசிக்கு

மனங்களே வீடு/

அரசியல்வாதிக்கு ஊருக்கு ஒரு பண்ணை வீடு /

நடுத்தர வர்க்க நாயகனுக்கு

வாழ்நாள் கனவே வீடு/

நம் பசி தீர்க்கும் விவசாயிக்கு ஓலைக்குடிசையே

மாளிகை/

அடித்தட்டு மக்களுக்கோ நடைபாதைகளே

நிரந்தர வீடு/

பல்லாயிரம் அடிகொண்ட

பங்களாவில் வாழும்

கோடீஸ்வரரே ஆனாலும் இறுதியில்

ஓய்வெடுப்பது

ஆறு அடி மன்னில்தான்,/

தகனம் செய்தால் கூட

மிஞ்சுவது கைப்பிடி

சாம்பல் மட்டுமே?

ஜனனத்திற்கும் –

மரணத்திற்கும் இடையில்

எத்தனை, எத்தனை வேடங்கள்?

“வாழ்க்கை “

எனும் நாடகத்தில்!?//


-கோபாலன் நாகநாதன்

சென்னை-33.