tamilnadu epaper

உறவு

உறவு

உற்றமும் சுற்றமும்        
    உடன் இருப்பாரென
பற்றிப் படிந்து
   பலகாலம் பேண
அற்ற குளத்து
    அறுநீர்ப் பறவையென
இற்ற கயிராய்
      அறுந்து போகுதே!
வளர்பிறை நிலவாய் 
     வாழ்ந்திட  வேண்டின்
தேய்பிறை நிலவாய்த்
     தினந்தினம் சுருங்க
புதுப்புது பொருளைப்
    புரிய வேணுமோர்
புத்தம் புதிய 
    அகராதி அறிவீர்

சே.முத்துவிநாயகம்
திருநெல்வேலி