உலக செஞ்சிலுவை தினத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் மனித உயிர்களையும் குறிப்பாக ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதாகும். மருத்துவ அவசரங்கள், முதலுதவி தேவை, மரண விளிம்பில் இருந்து மக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றிற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
1828 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி பிறந்த ஹென்றி டுனாண்டின் பிறந்தநாளை உலக செஞ்சிலுவைச் தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய இந்த ஹென்றி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.
செஞ்சிலுவைச் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு 1919 ஆம் ஆண்டு பாரிஸில் முதன் முதலில் நிறுவப்பட்டது. 1984 ஆம் ஆண்டு இந்த நாள் அதிகாரப்பூர்வமாக உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என பெயரிடப்பட்டது.
இந்த உலக செஞ்சிலுவை தினத்தின் முக்கிய நோக்கம் என்பது இரத்தத்தைச் சேகரிப்பதாகும். முதல் உலகப்போருக்குப் பிறகு உலக செஞ்சிலுவை தினம் கொண்டாடப்பட்டது. மனிதக் குலத்திற்குச் சேவை செய்வது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த செஞ்சிலுவை தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
முதலாம் உலகப் போருக்குப் பிறகு உலகமே ரத்தத்தில் மிதந்தன. அந்த நேரத்தில் சமாதானத்திற்கான தேவை ஏற்பட்டது. முதலில் இந்த நாள் செஞ்சிலுவைச் சங்க நாள் என அழைக்கப்பட்டது. அதன் பின்னர் பல மாற்றங்கள் செய்யப்பட்டு 1984 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என அழைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் செஞ்சிலுவை தினம் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது.
சமாதானத்துடன் அமைதியான வாழ்க்கையை இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தினத்தில் மனித வாழ்க்கையை மனிதத் தன்மையோடு வாழ உறுதி ஏற்போம்.
தொகுப்பு: பா. சீனிவாசன், செயலாளர், இந்தியன் ரெட் கிராஸ் சங்கம், வந்தவாசி கிளை.