எங்கள் ஊர் சென்னையில் உள்ள புகழ்பெற்ற பகுதியான ஆழ்வார்பேட்டை ஆகும். இதன் வடக்கு மற்றும் கிழக்கில் தேனாம்பேட்டை, கிழக்கில் மைலாப்பூர், மந்தைவெளி மற்றும் அபிராமபுரம், தெற்கில் ராஜா அண்ணாமலைபுரம், தென்மேற்கில் நந்தனம் ஆகிய நகரங்களால் சூழப்பட்டுள்ளது. இதன் அருகிலுள்ள மெட்ரோ நிலையம் தேனாம்பேட்டை மெட்ரோ நிலையம்
சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், ஆழ்வார்பேட்டை அமைந்துள்ளது.
போட் கிளப் மற்றும் போயஸ் கார்டன் போன்ற இரண்டு குடியிருப்புப் பகுதிகள் இங்கு உள்ளன. போயஸ்கார்டன் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மற்றும் பிரபல நடிகர் ரஜினிகாந்த்தின் இருப்பிடமாகும். போட் கிளப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரும், இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என். ஸ்ரீனிவாசன் வசிக்கிறார். திரைப்பட நடிகர் கமலஹாசன் அலுவலகம் மற்றும் சங்கீத அகாடமி போன்றவை இங்கு உள்ளன. பார்க் செரடன் போன்ற நட்சத்திர விடுகள் இங்குதான் உள்ளது. ஆழ்வார்பேட்டை மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தை ஒட்டியுள்ள போட் கிளப் சாலை, இந்தியாவில் மூன்றாவது மிக விலையுயர்ந்த இடமாகவும், தென்னிந்தியாவில் மிகவும் விலை உயர்ந்ததாகவும் உள்ளது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள முக்கிய பகுதிகள்
சீத்தம்மா சாலை
எல்டம்ஸ் சாலை
பாஷ்யம் பஷீர் அகமது சாலை
முரேஸ் கேட் ரோடு
வீனஸ் காலனி
கதீட்ரல் சாலை
கஸ்தூரி ஐயங்கார் சாலை
பெரும்பாலும் அந்தந்த பகுதியிலே வாசிக்கும் பிரபலங்களின் பெயர்களின் அடிப்படையிலேயே அந்தந்த பகுதிகள் அழைக்கப்படும். அதன்படியே ஆழ்வார்பேட்டையில் உள்ள பகுதிகளும் சாலைகளும் அமைந்துள்ளன பாஷ்யம் அய்யங்காரும் பஷீர் அகமதும் வசித்த சாலை பாஷ்யம் பஷீர் அகமது சாய் என்று மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் அழைக்கப்படுவது சிறப்பாகும்
ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் புத்திர பாக்கியம் வேண்டுபவர்களும் புத்திர தோஷம் நீங்க வேண்டுபவர்களும் இங்கு வந்து வேண்டினால் தங்கள் கோரிக்கை நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வைணவ அடியார்களான ஆழ்வார்களின் பெயரில் அமைந்த இந்த ஆழ்வார்பேட்டை பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் இருப்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.