tamilnadu epaper

எங்கள் ஊர் கபிலர்மலை சிறப்புகள்

எங்கள் ஊர் கபிலர்மலை சிறப்புகள்

எங்கள் ஊர் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. பரமத்தி-வேலூர் வட்டத்தில் உள்ள கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், கபிலர்மலையில் இயங்குகிறது.2008ல் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் கபிலர்மலை சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டு, பரமத்தி வேலூர் புதிய சட்டமன்றத் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. தமிழ் நாட்டின் சுற்றுலா தலமான ஜேடர்பாளையம், கபிலர்மலை அருகில் உள்ளது.

 

 

ஜேடர்பாளையம் அணை நாமக்கல் மாவட்டத்தில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. நாமக்கல் நகரத்திலிருந்து 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது காவிரி ஆறிறன் குறுக்கே கட்டப்பட்டுள்ளது

 

 

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[ 

 

• அ. குன்னத்தூர் 

 

• ஆனங்கூர் 

 

• இருக்கூர் 

 

• கபிலக்குறிச்சி 

 

• கொந்தளம் 

 

• கொப்பனாம்பாளையம் 

 

• கொத்தமங்கலம் 

 

• குப்பிரிக்காபாளையம் 

 

• குரும்பலாமாதேவி 

 

• பெரியசோளிபாளையம் 

 

• பெருங்குறிச்சி 

 

• பிலிக்கல்பாளையம் 

 

• சேளூர் 

 

• சிறுநல்லிக்கோவில் 

 

• சோழசிராமணி 

 

• சுள்ளிபாளையம் 

 

• டி. கவுண்டம்பாளையம் 

 

• திடுமல் 

 

• வடகரையாத்தூர் 

 

• ஜமீன் இளம்பள்ளி 

 

கபிலர்மலையில் புகழ்பெற்ற கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,  உள்ளது.கபிலர்மலையில் தை பூசத் தேர் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். வேளாண்மை முக்கிய தொழில். பல சிற்றூர்களைத் தன்னுள் கொண்டுள்ள ஊர்.கோவிலில் பாலசுப்ரமணியர் - முருகன் மையக் கடவுள். மலை உச்சியில் பிள்ளையார் உள்ளது. மலையில் வற்றாத சுனை நீர் உள்ளது. இந்த மலையில் ஒரு சில அரிய மூலிகை உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவில் கட்டியவர் பற்றியும் அதன் வருடம் பற்றி சரியான தகவல் தெரியவில்லை. மலையில் சில கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோவிலின் உள்ளே அழகான சிற்பங்களும், ஓவியங்களும் காணப்படுகின்றன. 

 

• குழந்தை வடிவில் இத்தலத்தில் அருள்பாலிக்கும் பாலசுப்பிரமணிய சுவாமி, ‘தென்றல் காற்று பரவும் குழந்தை குமாரர் என்று போற்றப்படுகிறார். 

 

• கடல் மட்டத்தில் இருந்து 150 அடி உயரத்தில் கபிலர்மலையின் நடுவில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குச் செல்ல 120 படிகள் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. 

 

• கோயிலின் மூலஸ்தானம் அமைந்துள்ள பாறைக் குகையின் துவாரம் வழியாக எப்போதும் தென்றல் காற்று வீசி, கந்தனுக்கு அருகே எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் தீபத்தை அசைத்துக் கொண்டிருப்பது தனிச்சிறப்பு. 

 

கபிலர்மலை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி (1909-) நூற்றாண்டு கடந்து நிற்கிறது என்பது இதன் சிறப்பு.

 

செந்தில்குமார் 

 

கோயம்புத்தூர்