tamilnadu epaper

எங்கள் ஊர் சூரக்கோட்டை சிறப்புகள்

எங்கள் ஊர் சூரக்கோட்டை சிறப்புகள்

 

எங்கள் ஊர் சூரக்கோட்டையானது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர்

 வட்டாரத்தில் அமைந்துள்ளது.இந்த ஊராட்சி, ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிக்கும் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4304 ஆகும். இவர்களில் பெண்கள் 2122 பேரும் ஆண்கள் 2182 பேரும் உள்ளனர்.

எங்கள் சூரக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின்  பெயர்கள்

அம்மாகுளம்,கீழவஸ்தாசாவடி,

நத்தம்படிபட்டி,

நத்தம்படிபட்டி எம்ஜிஆர் நகர்,

பெரியபுதுபட்டிணம்,

யாகப்பாசாவடி,,

சூரக்கோட்டை,,

கன்னித் தோப்பு போன்றவை ஆகும். 

 

பட்டுக்கோட்டை மன்னார்குடி பிரிவு சாலை அருகே உள்ள சூரக்கோட்டை கிராமத்தில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுகுந்த குந்தளாம்பிகை உடனுறை சுத்தரத்தினேஸ்வரர் சுவாமி திருக்கோவில் உள்ளது.இந்த கோவில் சுமார் 350 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் என்றும், சித்திரகுப்தனுக்கு ரத்தின அங்கி அளித்ததால் சுத்தரத்தினேஸ்வரர் கோவில் என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.மேலும், கோவிலின் சிறப்பு அம்சமாக சித்திரை மாதம் 1ஆம் தேதி அன்று சூரியபகவான் சுத்தரத்தினேஸ்வரர் சுவாமி மீது தங்க நிறத்தில் ஜொலிக்கும் வகையில் சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி நடைபெறும். 

 

மேலும் எங்கள் சூரக்கோட்டையில் புகழ்பெற்ற பரமநாத அய்யனார் சுவாமி திருக்கோயிலும் உள்ளது.இங்குள்ள மூலவர் பரமநாத அய்யனார், பூரணை புஷ்கலையுடன் ஒரு காலை மடக்கியபடி அமர்ந்த நிலையில் உள்ளார். மேலும் இந்த கோயிலில் மதுரை வீரன், பொம்மி மற்றும் வெள்ளையம்மாளுடன் சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் முனீசுவரன், பேச்சியம்மன், நாகப்பன் முதலியோர் சன்னதிகள் உள்ளன. கன்னிமூலையில் மங்கள விநாயகரும் உள்ளனர்.[ 

 

சூரக்கோட்டையில் மக்கள் பயன்பாட்டிற்காக அம்பலகாரன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மக்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

 

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 3 பேரூராட்சி, 1,153 சிறிய கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.தஞ்சை மாவட்டத்தில் செம்மங்குடி, அணைக்குடி, வீரமாங்குடி மற்றும் கரம்பயம் பகுதிகளில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு, தஞ்சை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,153 சிறிய கிராமங்களை சேர்ந்த குடியிருப்புகள் மற்றும் அதிராம்பட்டினம், பேராவூரணி, பெருமகளூர் ஆகிய பேரூராட்சிகளை சேர்ந்த குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு தாலுகாவில் உள்ள அணைக்குடி, வீரமாங்குடி, செம்மங்குடி ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேகரிப்பு கிணறுகளிலிருந்து நீர் பெறப்பட்டு, வீரமாங்குடியில் அமைக்கப்பட்டுள்ள 21.20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பொது நீர் சேகரிப்பு தொட்டிக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து சூரக்கோட்டை மற்றும் புதூர் பகுதிகளில் உள்ள தரைமட்ட தொட்டிகள் வழியாக கரம்பயம் பகுதியில் உள்ள நீரேற்று தொட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

 

கரம்பயம் நீர்த்தேக்க தொட்டியிலிருந்து சுமார் 604.52 கி.மீ. நீளமுள்ள நீரேற்று குழாய்கள் மூலமாக 3 வழித்தடங்களில் கொண்டு செல்லப்பட்டு, 9 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 180 தரைமட்ட தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.

180 தரைமட்ட தொட்டிகளில் சேகரிக்கப்படும் குடிநீர் 1049 கி.மீ. நீளமுள்ள நீரூட்டும் குழாய் மூலம் 1,153 ஊரக குடியிருப்புகள் மற்றும் 3 பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளில் ஏற்கனவே பயனில் உள்ள 1,291 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது 

 

சூரக்கோட்டை பகுதியில் பொங்கல் கரும்பு சாகுபடி பணிகளை விவசாயிகள் மும்முரமாக ஆண்டுதோறும் தொடங்குவார்கள். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடப்பது வழக்கம் மேலும் கரும்பு, வாழை, வெற்றிலை, வெள்ளரிக்காய், உளுந்து, எள், மக்காச்சோளம், பூக்கள் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் முக்கிய இடத்தை பொங்கல் கரும்பு பிடிக்கிறது.தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, திருவோணம், வெட்டிக்காடு, மாரியம்மன்கோவில், சாலியமங்கலம், கம்பர்நத்தம், குளிச்சப்பட்டு, ராராமுத்திரைக்கோட்டை, வாளமரக்கோட்டை, சூரக்கோட்டை என மாவட்டத்தின் பல பகுதிகளில் பொங்கல் கரும்புகள் நடவு செய்யப்படுவது வழக்கம். பொங்கல் கரும்புகள் வழக்கமாக ஏப்ரல் கடைசி வாரம் மற்றும் மே மாதங்களில் நடவு செய்யப்படும். ஏனெனில் இந்த காலக்கட்டத்தில் நடவு செய்தால்தான் ஜனவரி மாதத்தில் அறுவடை செய்ய முடியும். ஒவ்வொரு ஆண்டும் எங்கள் சூரக்கோட்டையிலும் பொங்கல் கரும்பு நடவுப்பணிகள் மும்முரமாக நடக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் எங்கள் சூரக்கோட்டையில் விதைக்கரும்புகள் தயார் செய்து நட்டு விவசாயிகள் தீவிரமாக கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கரும்பு 10 மாத பயிராகும்.

1 ஏக்கர் பரப்பளவுக்கு 15 ஆயிரம் துண்டு விதைக்கரும்பு தேவைப்படும்.  

 

 

நடிப்பு என்று சொன்னால் சட்டென்று செவாலியே நடிகர் திலகம் சிவாஜிபெயர்தான் அனைவரின்நினைவுக்கு வரும். அப்படி க தன் நடிப்பால் கலக்கிய மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எங்கள் சூரக்கோட்டை கிராமம்தான்.

எங்கள் சூரக்கோட்டையில் இருக்கும் அவரது பண்ணை சுமார் 48 ஏக்கர் ஆகும். பண்ணை ஓரத்தில் இருக்கும் ஒரு கூரை வீட்டில் தான் சிவாஜி குடும்பத்தினர் இருந்துள்ளனர். பின்பு சிவாஜி சினிமாவிற்கு வந்த பிறகு, வீட்டை சுற்றியுள்ள 48 ஏக்கர் இடத்தையும் வாங்கி அந்த இடத்தில் ஒரு பெரிய வீட்டையும் கட்டியுள்ளார். முழுவதும் தென்னந்தோப்புதான்.

மாட்டு வண்டிகள் சூழ அந்த வீடானது 60 ஆண்டுகள் பழமையான மிகவும் அழகான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. பொங்கல் பண்டிகை தோறும் தவறாமல் நடிகர் பிரபு குடும்பத்தினர் பொங்கல் விழாவை இங்கு வந்து கொண்டாடுகின்றனர். தஞ்சை சுற்றியுள்ள பக்கத்து மாவட்டங்களுக்கு படப்பிடிப்புக்காக நடிகர் பிரபு குடும்பத்தினர் யார் வந்தாலும் இந்த பண்ணைக்கு வந்து செல்வதும் வழக்கம். சில தமிழ் படங்களுக்கும் இந்த பண்ணையில் படப்பிடிப்புகளும் நடந்துள்ளது.

தஞ்சைக்கு சுற்றுலாவாக வருபவர்கள் சூரக்கோட்டை பண்ணையையும்  பார்க்க வருகின்றனர்.

 

-மணிமேகலை

 க/ பெ: சாதனை ராஜா கஞ்சிக்குழி