திருச்சுழி ஓர் அழகிய ஊராகும்.இது அருப்புக்கோட்டைக்கு கிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. எங்கள் ஊர் திருச்சுழி.இது விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதி, இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. இத்தொகுதியில் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகளும் மற்றும் காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளும் உள்ளது. இத்தொகுதியில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் இரமண மகரிசி அவதரித்த புண்ணியதலம் இது. இங்குள்ள திருச்சுழி திருமேனிநாதர் கோயில் சிவாலயம், தென்னிந்தியாவில் உள்ள பழம்பெரும் கோயில்களில் ஒன்று. ரமண மகரிசி ஆசிரமம் ஒன்றும் எங்கள் ஊரில் உள்ளது.சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை திரிசூலத்தினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு யுகத்திலும் இவ்வூரில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உண்டாவதுண்டு. துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த பாண்டிய மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற சிவபெருமானை வேண்டினார்.திருச்சுழி அமைந்துள்ள பூமிநாதர் கோவில் பாண்டி 16 திவ்யதேசங்களில் பத்தாவது புண்ணிய ஸ்தலமாக இக்கோயில் விளங்கி வருகிறது. பங்குனி மகம் நட்சத்திரத்தில் கெளதம அகலிகை சாபவிமோசனம் பெறும் இடமாக திகழ்ந்து வருகிறது. மேலும் பூமிநாதர் ஆகிய சிவனும் சகாய வள்ளி சிவன் பார்வதி இருவரும் திருமண கோலம் காட்சி அளித்தனர்.காசி ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக திருச்சுழியல் பூமிநாதர் திருக்கோயில் திருத்தலம் புவியியல் அமைப்பில் அமைந்துள்ளது. அதுபோல யோகியாக வாழ்ந்து ஜோதி வடிவில் ஐக்கியமான ரமண மகரிஷி பிறந்த சிறப்பு திருச்சுழிக்கு உள்ளது. ரமண மகரிஷி பிறந்த இல்லத்தை அமெரிக்கா ஜப்பான் உள்ளிட்ட வெளி நாட்டவர் பெரும் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர் .
திருச்சுழி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கிருதுமால் நதியில் தொடர்ந்து வருடந்தோறும் வைகை ஆற்றில் இருந்து நிரந்தரமாக தண்ணீர் திறக்க அரசு உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை வேண்டும். மேலும் தொகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் தண்ணீரை முழுமையாக முறைப்படுத்த வேண்டும், மழை காலங்களில் குண்டாற்றில் வரும் தண்ணீரை இந்த பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு கொண்டு செல்ல ஆங்காங்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் திருச்சுழி தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது. மேலும் இந்த பகுதி இளைஞர்களின் வாழ்வுக்கு வழிகாட்டும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் .
அ.பேச்சியப்பன்
174/135, மீனாட்சி திரையரங்க சாலை, சந்தன மாரியம்மன் கோயில் அருகில், இராசபாளையம் 626117
விருதுநகர் மாவட்டம்