முத்துப்பேட்டை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். இது திருத்துறைப்பூண்டிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையில், சென்னையில் இருந்து சுமார் 360 கி.மீ.தொலைவில் இந்த நகரம் வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ளது குறிப்பாக காவிரி டெல்டாவின் தென்பகுதியில் உள்ளது. முத்துப்பேட்டை கிழக்கு மற்றும் மேற்கில் முறையே கோரையாறு மற்றும் பாமணியாறு ஆறுகளால் எல்லையாக உள்ளது. கோரையாறு மற்றும் பாமணியாறு ஆகிய ஆறுகள் முத்துப்பேட்டை அருகே இணைகின்றன, இந்த ஊரின் சிறப்பே ஆண்டவர் ஷேக் தாவூத் கமில் ஒலியுல்லாவின் 700 ஆண்டுகள் பழமையான இஸ்லாமிய ஆலயம் தான் இந்த தர்கா பாரம்பரிய கட்டிடக்கலையைப் பயன்படுத்தி கட்டப்பட்டது. இந்த புனித தர்காவிற்கு ஜாதி, மதம், மத வேறுபாடின்றி கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் பாகிஸ்தான் , பங்களாதேஷ் , இலங்கை , மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர் .இங்கு 14 நாட்கள் நடக்கும் கந்தூரி விழா பிரசித்தி பெற்றது.
இந்த தர்கா குறித்து கூறப்படும் வரலாறு வருமாறு, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை இருந்தது. இதன் அருகே உள்ள ஒரு கிராமம் ஜாம்புவானோடை. கடந்த 1306-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி (ஹிஜ்ரி 727 ஜமாதுல் அவ்வல் மாதம் முதல் பத்து) அன்று ஜாம்புவானோடை கிராமத்தை சேர்ந்த கருப்பையா கோனார் என்பவர் விவசாயத்திற்காக ஏர் உழுது கொண்டிருந்தார்.
அப்போது ஏர் கொம்பு முனை பட்டு நிலத்தில் இருந்து ரத்தம் பீரிட்டு கருப்பையா கோனாரின் கண்களில் அடித்தது. இதனால் அவர் உடல் தளர்ந்து கண்ணொளி மங்கி தள்ளாடியவராக வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ஒருவித மன குழப்பத்துடன் அவர் இரவு உறங்கும்போது, அதுவரை பார்த்திடாத அழகிய அரபி தோற்றமுடைய பெரியவர் கனவில் தோன்றி, 'நீர் ஏர் உழுத இடத்தில் நான் வெகு காலத்திற்கு முன்பு அடக்கமாகி இருக்கின்றேன். என்னுடைய பெயர் ஷெய்குதாவூது என்பதாகும். உன்னுடைய இரு கண்களும் எல்லாம் வல்ல அல்லாவின் அருளால் மீண்டும் பிரகாசம் பெற்றுவரும் கவலைப்பட வேண்டாம். இங்கிருந்து 6 கல் தொலைவிலுள்ள நாச்சிகுளத்தில் வட புலத்தைச் சார்ந்த 2 பெரியவர்கள் கபீர்கான், ஹமீதுகான் ஆகிய இருவரிடம் சென்று நடந்ததை கூறி அவர்களை அழைத்து வந்து ஏர் உழுத இடத்தில் தெற்கு வடக்காக எனது தலைபாகத்திலும், கால் பாதத்தில் இரண்டு புஷ்பங்கள் இருப்பதை காண்பீர்கள் என்று கூறி ஜியாரத்தை கபுர் இருக்கும் இடத்தை அமைத்து விளக்கு ஏற்ற சொல் என கூறிவிட்டு அந்த மகான் மறைந்து விட்டார்கள்.இதையடுத்து அவர் கண்விழித்து பேரானந்தத்துடன் மகான் சொன்ன பெரியவர்களை சந்தித்து அழைத்து வந்து விளக்கேற்றி ஜியாரத் செய்தார்கள். அன்று முதல் எண்ணிலடங்காத அற்புதங்கள் அங்கு நடந்தேறி வருகின்றன
இம்மாவட்டத்தின் இயற்கை அழகிற்கு முத்துப்பேட்டையில் அமைந்துள்ள மாங்குரோவ் காடுகள் காரணமாகிறன்றன. 1937 பிப்ரவரி மாதத்தில் முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாக சென்னை மாகாண அரசினால் அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு வனத்துறை இதனைப் பாதுகாத்து பராமரித்து வருகிறது.இது இயற்கை சதுப்புநில காடு , அலையாத்தி காடு, இந்தியாவிலேயே மிகப்பெரியது ஆர்க்கும். மீன்பிடித்தல், முத்து வேட்டை மற்றும் பறவைகளை வேட்டையாடுவதற்கு ஒரு முக்கிய இடமாகும். கொடுவா, இறால் மற்றும் நண்டு ஆகியவை அதிகமாக கிடக்கிறது.
இங்குள்ள அலையாத்தி காடு சிறப்பு வாய்ந்தது. அலையாத்தி காடுகளின் சிறப்புத் தன்மை, அங்குள்ள மரங்களின் சுவாச வேர்களாகும். இங்குள்ள மரங்களின் வேர்கள், நிலத்துக்கு அடியிலும், நிலத்திற்கு வெளியிலும் நிலைபெற்றிருக்கும். ஏனெனில் சதுப்பு நிலப் பகுதிகளில் ஆக்சிஜன் அளவு மிக குறைவாக இருக்கும் என்பதால் சுவாசிப்பதற்காக வேர்கள் பூமிக்கு வெளியே தலை நீட்டுகின்றன. அந்த வேர்கள்தான், ஆக்சிஜனை உள்ளிழுத்து, மரங்கள் அனைத்தும் வாழ்வதற்கு உதவி புரிகின்றன. அலையாத்தி காடுகள் உள்ள பகுதிதான், அரிய வகை விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மீன்கள் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகின்றன.
2004-ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரலைக்கு பின்னர்தான், அலையாத்தி காடுகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அலையாத்தி காடுகளில் உள்ள மரங்களின் வேர்கள், மணலை இறுகச் செய்து, கடல் சீற்றம் ஏற்படும் வேளையில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. 80 முதல் 100 மைல் வேகத்தில் வருகிற புயல் காற்றைக்கூட தடுத்து நிறுத்தும் வலிமை அலையாத்தி காடுகளுக்கு உண்டு.
இங்குள்ள மாரியம்மன் சன்னதியும், விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது.
-
எஸ்.ரவீந்திரன் சென்னை -56